மன்னார் தொடருந்துப் பாதை

மன்னார் தொடருந்துப் பாதை (Mannar Line) என்பது இலங்கையின் உள்ள ஒரு தொடருந்துப் பாதை ஆகும். இது வடக்குப் பாதையில் இருந்து மதவாச்சி சந்தியில் இருந்து பிரிந்து வட-மேற்கே வட மத்திய, மற்றும் வடக்கு மாகாணங்களுக்கூடாக சென்று தலைமன்னாரில் முடிவடைகின்றது. 106 கிமீ (66 மைல்) நீளமான இப்பாதையில் 11 தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.[1] இப்பாதை முதன் முதலாக 1914 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[2]

மன்னார் தொடருந்துப் பாதை
Mannar Line
பொதுத் தகவல்
வகைபிராந்தியத் தொடருந்துப் போக்குவரத்து
திட்டம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
நிலைதலைமன்னார் வரை இயங்குகிறது.
முடிவிடங்கள்மதவாச்சி சந்தி
தலைமன்னார்
நிலையங்கள்11
இயக்கம்
திறக்கப்பட்டது1914
மீளத் திறப்பு14 மார்ச் 2015
உரிமையாளர்இலங்கை தொடருந்து போக்குவரத்து
இயக்குவோர்இலங்கை தொடருந்து போக்குவரத்து
தொழில்நுட்பத் தகவல்
தண்டவாளங்கள்1
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்னிணைப்பு வசதிஇல்லை

வரலாறுதொகு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடருந்துப் பாதை ஒன்றை அமைக்கும் திட்டத்தில் மன்னார் பாதை திறக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே 22 மைல் நீளப் பாலம் ஒன்று அமைப்பதற்காக மதராசு ரெயில்வே பொறியாளர்களால் 1894 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்கான தொழினுட்ப அச்சுப்படி வரையப்பட்டு, செலவுப் பகுப்பாய்வும் செய்யப்பட்டது. மன்னார் தீவில் அமைந்துள்ள தலைமன்னாரையும் இலங்கைப் பெரும் பரப்பையும் இணைக்கும் மன்னார் பாதை 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தியப் பகுதியில் தனுஷ்கோடி வரை தொடருந்துப் பாதை நீடிக்கப்பட்டது. ஆனாலும் இரு நாடுகளையும் இணைக்கும் பன்னாட்டுத் தொடருந்துப் பாலம் நிர்மாணிக்கப்படவில்லை.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "Statistics - Sri Lanka Railways". Ministry of Transport, Sri Lanka.
  2. "The Rail Routes of Sri Lanka". Infolanka.com.
  3. http://infolanka.asia/sri-lanka/transport/the-indo-lanka-land-bridge-reviving-the-proposal The Indo-Lanka Land bridge: Reviving the Proposal