மன்னார் தீவு

மன்னார் தீவு (Mannar Island), இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி. இலங்கையின் பிற பகுதிகளுக்கு பாலம் ஒன்று இணைக்கிறது. 50 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. ராமர் பாலம் இலங்கையின் மன்னார் பகுதியையும் இந்தியாவின் பாம்பன் தீவையும் இணைக்கிறது.

மன்னார் தீவு
தீவு
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார் மாவட்டம்

1914 முதல் 1964 வரையில், தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதிகளை இணைக்க தொடருந்து-பயணப்படகு வசதி இருந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் ஏற்பட்ட அழிவு காரணமாக இவ்வசதி நிறுத்தப்பட்டது.

மன்னார் தீவும் ராமர் பாலமும்

மன்னார் தீவு காய்ந்த, வறண்ட பிரதேசம் ஆகும். மீன்பிடித்தலே இங்கு முக்கியமான தொழிலாகும்.[1]

மன்னார் தீவின் முக்கிய குடியேற்றப் பகுதிகள் கிழக்குக் கரையில் மன்னார் நகரம், எருக்கலம்பிட்டி, வடக்குக் கரையில் பேசாலை ஆகியவையாகும். இவை அனைத்தையும் ஏ14 நெடுஞ்சாலை பாலம் ஊடாக இலங்கையின் பெரும்பரப்பை இணைக்கின்றது.[2][3]

மேற்கோள்கள்தொகு

  1. Britannica article.
  2. Google Maps (Map). Google. |access-date= requires |url= (உதவி)
  3. Bing Maps (Map). Microsoft and Harris Corporation Earthstar Geographics LLC. |access-date= requires |url= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_தீவு&oldid=1373496" இருந்து மீள்விக்கப்பட்டது