மன்னார்

இலங்கையில் உள்ள ஒரு பட்டணம்

மன்னார் (Mannar) இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன.

மன்னார்
நகரம்
மன்னார் கலங்கரை விளக்கம்
மன்னார் கலங்கரை விளக்கம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்மன்னார்
பி.செ. பிரிவுமன்னார்
அரசு
 • வகைநகர சபை
 • தலைவர்சந்தானப்பிள்ளை ஞானப்பிரகாசம் (ததேகூ)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்35,817
 • அடர்த்தி308/km2 (797/sq mi)
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

சுற்றுலாப் பிரதேசங்கள்தொகு

மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்குச் சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவாரத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரம் பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம் யாத்திரீகர்கள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன.

அதே போல் மன்னாரில் உள்ள மடு ஆலயம் மிகப் பிரபனமான திருத்தலம் ஆகும். இங்கு இலங்கையில் உள்ள மக்கள் வருகை தந்து வழிபடுகின்றார்கள். மேலும் தலைமன்னார் கலங்கரை விளக்கம் புதியதொரு மாற்றம் கண்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. அத்துடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலமும் மக்கள் தமது பொழுதைக் கழிக்கச் செல்லும் இடமாகும்.

போக்குவரத்துதொகு

புகையிரத சேவைதொகு

தலை மன்னாரில் இருந்து மன்னார் மற்றும் மதவாச்சி வழியாக தொடருந்துப் போக்குவரத்து கொழும்பு வரை காணப்படுகின்றது போர்க்காலத்தில் சேதமுற்றுக் காணப்பட்ட இப் பாதையினை இலங்கை-இந்திய நட்புறவின் அடையாளமாக இந்திய அரசின் நிதியில் இருந்து மீள புணரமைக்கப்பட்டுள்ளது

பேருந்துச் சேவைகள்தொகு

கொழும்பிற்கு மன்னாரிலிருந்தும் வவுனியா ஊடாகவோ அல்லது நேரடியாக மதவாச்சியூடாகவோ பயணிக்கலாம்.

 • மன்னார் - கொழும்பு (மதவாச்சி வழியாக)
 • மன்னார் - வவுனியா
 • மன்னார் - கொழும்பு மன்னாரிலிருந்து சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி, எழுவன்குலம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, ஊடாக கொழும்பை சென்றடைகிறது.
 • மன்னார் - கல்பிட்டி, மன்னாரிலிருந்து சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி, எழுவன்குலம், புத்தளம், பாலாவி, நுறைச்சோளை, ஊடாக கல்பிட்டியைச் சென்றடையும்.
 • மறிச்சிக்கட்டியில் இருந்து பாலைகுளி, ஊடாக சென்று வில்பத்து வழியாக சென்று அநுராதபுர மாவட்டத்தின் வெள்ளச்சி கிராத்தைச் சென்றடைய முடியும்.

மன்னாரிலுள்ள பாடசாலைகள்தொகு

 • மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
 • மன்னார் சேவியர் பெண்கள் பாடசாலை
 • மன்னார் புனித ஆன் மத்திய மகா வித்தியாலயம், வங்காலை
 • வங்காலை மத்திய மகா வித்தியாலயம்
 • இலுப்பைக்கடவை அ.த.க .பாடசாலை
 • கள்ளியடி அ.த.க .பாடசாலை
 • இலந்தைமோட்டை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
 • புதுக்குடியிருப்பு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
 • மன்னார் சிலாபத்துரை முஸ்லிம் மகா வித்தியாலயம்.
 • மன் / பத்திமா மத்திய மகா வித்தியாலயம், பேசாலை
 • மன் / சென் மேரிஸ் வித்தியாலயம், பேசாலை

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மன்னார்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்&oldid=3398292" இருந்து மீள்விக்கப்பட்டது