இலங்கை சீர் நேரம்
இலங்கை சீர் நேரம் (Sri Lanka Standard Time, SLST, இலங்கை நியம நேரம்) என்பது இலங்கையின் நேர வலயம் ஆகும். இது கிரீன்விச் இடைநிலை நேரம் அல்லது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்த்தில் இருந்து 5 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள் முன்னோக்கியதாகும். (ஒ.ச.நே + 05:30).[1] இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை.
1880 ஆம் ஆண்டு முதல் இலங்கை சீர் நேரம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டது.[2] 1880 இல் இலங்கை சீர் நேரம் ஒசநே+5:30 ஆகவும், 1942 சனவரி மாதம் இரண்டாம் உலகப் போரின் போது யப்பான் இலங்கையை ஆக்கிரமிக்க அண்மித்திருந்த போது இலங்கை சீர் நேரம் ஒசநே+6:00 ஆகவும் 1942 செப்டம்பர் மாதம் UTC+6:30 ஆகவும் மாற்றப்பட்டது. போருக்குக் பின்னதாக 1945ஆம் ஆண்டு அது மீண்டும் ஒசநே+05:30க்கு மாற்றியமைக்கப்பட்டது.[2]
1996 இல் இலங்கையில் அப்போது காணப்பட்ட மின்வழுப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் 1996 மே 24 நள்ளிரவில் நேரம் ஒசநே+6:30க்கு மாற்றப்பட்டது.[3] 1996 ஆக்டோபர் மாதம் நேரம் ஒசநே+6:00க்கு மாற்றப்பட்டது.[2] ஆனாலும், இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஒசநே+05.30 நேரவலயமே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.[2]
இலங்கை நேரப்படி 2006 ஏப்ரல் 15 ஆம் நாள் 00:00 மணியானபோது அது இந்திய சீர் நேரத்துடன் ஒன்றுமாறு ஒசநே+05.30 ஆக மாற்றியமைக்கப்பட்டது.[2][4]
இலங்கையில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் அதன் பின்னர் அம்முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka Time". GreenwichMeanTime.com. Archived from the original on 2010-02-24. பார்க்கப்பட்ட நாள் 2010-03-02.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Time to end Sri Lanka time split?". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.
- ↑ "Principal Sri Lanka Events". Ferguson's Ceylon Directory, Colombo. 1997.
- ↑ "Clarke in protest at Sri Lanka time zone switch". டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.
வெளி இணைப்புகள்
தொகு- இலங்கை நியம நேர அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2015-11-18 at the வந்தவழி இயந்திரம்