வவுனியா
வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது. கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இன்றைய வவுனியா மாவட்டம் ரஜரட்டையின் ஒரு பகுதியாக இருந்தது. வவுனியா மாவட்டம் பின்னர் வன்னியர் தலைமைகளால் ஆளப்பட்டது, இந்த மாவட்டம் பின்னர் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1815 இல் ஆங்கிலேயர்கள் முழுத் தீவின் கட்டுப்பாட்டையும் பெற்றனர். அவர்கள் தீவை மூன்று இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகளாகப் பிரித்தனர்: கீழ் நாட்டு சிங்களவர்கள், கண்டிய சிங்களவர்கள் மற்றும் தமிழ். அப்போது வன்னி மாவட்டம் என்று அழைக்கப்பட்ட மாவட்டம் தமிழ் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1833 ஆம் ஆண்டில், கோல்ப்ரூக்-கேமரூன் கமிஷனின் பரிந்துரைகளின்படி, இன அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்புகள் ஐந்து புவியியல் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒற்றை நிர்வாகமாக ஒருங்கிணைக்கப்பட்டன. வன்னி மாவட்டம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டத்துடன் இணைந்து புதிய வடக்கு மாகாணத்தை உருவாக்கியது. வன்னி மாவட்டம் பின்னர் முல்லைத்தீவு மாவட்டமாகவும் பின்னர் வவுனியா மாவட்டமாகவும் மாற்றப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த நேரத்தில், வட மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் வவுனியாவும் ஒன்றாகும். செப்டம்பர் 1978 இல் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை உருவாக்கப்பட்டது.
வவுனியா | |
வவுனியா நகரின் ஒரு பகுதி. | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
அமைவிடம் | 8°45′15″N 80°29′53″E / 8.754239°N 80.497971°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 30-120 மீட்டர் மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அரச அதிபர் | திரு.பந்துல ஹரிச்சந்திரா |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 43000 - +94-24, - NP |
வவுனியா மாவட்டத்தின் மேற்பரப்பு நீர்
புவி மேற்பரப்பில் காணப்படும் நீர் வளிமண்டலச் செயற்பாடுகளுடன் இணைந்ததுடன் கண்டங்களின் காலநிலைகளை நிர்ணயிப்பதிலும் ஓர் அடிப்படைக் காரணியாக விளங்குகின்றது. அயன மண்டல நாடான இலங்கையின் நீர்வளங்கள் மழைவீழ்ச்சியில் காணப்படும் பருவகால, இடம்சார்ந்த வேறுபாடுகளினா தீரமானிக்கப்படுகின்றன. புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற நீரானது மேற்பரப்பு நீர், தரைகீழ்நீர் என வகைப்படுத்தப்படுகின்றது. நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்களில் தேங்கியுள்ள வடிவிலும் ஆறுகள், கங்கைகளில் ஓடும் நீர் வடிவிலும் மேற்பரப்பு நீர் காணப்படுகின்றது. இலங்கையின் மத்திய மலைத்திணிவுகளிலிருந்து 103 ஆறுகள் நாட்டின் பல பாகங்களினூடாக ஆரை வடிவில் பாய்ந்தோடுகின்றன. இலங்கை ஒரு பொருளாதார நாடாக இருப்பதனால் உலர்வலய விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தியில் நீரானது நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேற்பரப்பு நீர்வளங்களாக குளங்களும் ஆறுகளும் காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் வவுனியா மாவட்டத்தில் நீர்த் தேவைகள் குளங்களில் இருந்து பூர்த்தி செய்யப்பட்டது. எனினும் விவசாயத் தேவைக்கான நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக தோட்டக் கிணறுகள் போன்ற ஆழமான கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றது. இங்குள்ள குளங்களில் பாரிய குளங்கள் ஆண்டு முழுவதும் நீரினைக் கொண்டு காணப்படுகின்றது. எனினும் சிறிய குளங்கள் மாரி காலங்களில் நீரினைக் கொண்டதாகவும் வரண்ட மாதங்களில் வற்றிவிடும் தன்மையும் கொண்டுள்ளது. அந்தவகையில் இம் மாவட்டத்தில் ஒரு பெரிய குளம் உட்பட 22 நடுத்தர குளங்களும், 674 சிறிய நீர்பாசன குளங்களும் அத்துடன் 22 புராதன குளங்களும் காணப்படுகிறது. இங்கு நீர் வளமானது மழைவீழ்ச்சியிலும் வற்றாத ஆறுகளிலும் தங்கியுள்ளது. 674 சிறிய நீர்ப்பாசன திட்டத்தில் 83 கைவிடப்பட்டுள்ளது. உலக வங்கி நிதிஉதவித்திட்டத்தின் கீழ் NEIAP – I மூலம் 103 சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் 01.04.2005 ஆண்டின் இறுதியில் பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் 22 குளங்கள் 2004 இல் 10,000 சிறிய குளங்கள் மீளமைப்பு திட்டத்தின் கீழ் மீளமைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்றன.
கல்வி
தொகுபல்கலைக்கழகம்
தொகுஇலங்கையின் வவுனியா பல்கலைகழகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் பல்கலைகழகத்திற்கு ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளன.
பாடசாலைகள்
தொகு- வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை [1] (1878 இல் அமைக்கப்பட்டது, வவுனியாவின் முதல் பாடசாலை)
- வவுனியா மகா வித்தியாலயம் [2]
- இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
- வவுனியா பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்
- வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம் ([1] பரணிடப்பட்டது 2017-05-24 at the வந்தவழி இயந்திரம்)
- பாவற்குளம் மகாவித்தியாலயம்
- வவுனியா விபுலாநந்தா கல்லூரி
- சைவப்பிரகாச வித்தியாலயம்
- வவுனியா இந்துக் கல்லூரி
- வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகா வித்தியாலயம்
- மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம்.
- ஓமந்தை மத்திய கல்லூரி
- வவுனியா சர்வதேசப் பாடசாலை
- சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
- பூவரசன்குளம் மகாவித்தியாலயம்
- வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம்
- வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்.
தொழில் நுட்பக் கல்லூரி
தொகுவவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.
விவசாயக் கல்லூரி
தொகுவவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் வவுனியா விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய பட்டயப் படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
மத வழிபாட்டுத் தலங்கள்
தொகுவவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.[3][4]
சைவக் கோயில்கள்
தொகு- சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
- வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
- லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், பூந்தோட்டம்
- வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
- காளிகோயில்-குருமன்காடு
- ஸ்ரீ கந்தசாமி கோயில் வவுனியா நகர்
- ஸ்ரீ கந்தசாமி கோயில் தாண்டிக்குளம்
- சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
- பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
- ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
- சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளங்குளம்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
- ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
- ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
- கருமாரி அம்மன் கோவில் (வைஜயந்த் சர்மா)
- தேடிவந்த பிள்ளையார் கோவில் (வைத்தீஸ்வரக்குருக்கள்)
- பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம்.
- ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் , கூமாங்குளம்
- ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் - தோணிக்கல்
- சாஸ்த்திரிகூழாங்குளம் சிவன் கோயில்
- தோணிக்கல் நாகதம்பிரான் ஆலயம்
கிறித்தவ ஆலயங்கள்
தொகு- கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
- புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
- கிறிஸ்து அரசா் ஆலயம் -குருமன்காடு
- புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
- குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்கு
- யெகோவாவின் சாட்சிகளின் வணக்கஸ்தலம் - உக்குளாம் குளம்
- புனித குழந்தை இயேசு தேவாலயம்-சமளங்குளம்
தூய ஆவியானவரின் ஆலயம் - இலுப்பையடி
போக்குவரத்து
தொகுவவுனியா தொடருந்து நிலையம் ஊடான தொடருந்து சேவைகள் காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குச் செல்கின்றன. இருபத்து நான்கு மணிநேரமும் போக்குவரத்து வசதியை பெற முடிதல் வவுனியா நகரின் சிறப்பாகும்
தொலைத் தொடர்பு
தொகுவவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
- அஞ்சற் குறியீடு: 43000
- தொலைபேசிக் குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள)
டயலாக், மொபிடெல், ஹட்ச், எயார்டேல், எடிசலட் மற்றும் லங்காபெல் போன்ற தனியார் தொலைபேசி நிறுவங்களும் சிறி லங்கா டெலிகொம்மும் தொலைபேசி மற்றும் 4G இணையத்தள சேவையினை வழங்குகின்றன
அரச இலவச Wi-fi ( வயர்லெஸ் ) சேவையினை வவுனியா பேருந்து நிலையம், வவுனியா புகையிரத நிலையம், வவுனியா பொது நூலகம் ஆகிய இடங்களில் பெற முடிவதுடன் தனியார் சேவையினை அசிச்டியா ( Assistia ) நிறுவனம் வழங்குகிறது
வானொலிகள்
தொகு- புகழ் இணைய வானொலி
- இலங்கை வானொலி வன்னிச்சேவை
- பண்பலை நாதம்
இதழ்கள்
தொகு- சகா பத்திரிகை
- நிலம் - கவி இதழ்
- தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
- பூங்கனி - மாதமொருமுறை
- வெளி - சிந்தனை இதழ்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://vcctmsopu.synthasite.com/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-05-20.
- ↑ "Salt on Old Wounds: The Systematic Sinhalization of Sri Lanka’s North, East and Hill Country (2012) - Annex III (Destruction of Hindu Temples)". https://sivasinnapodi.files.wordpress.com/2012/03/86040164-salt-on-old-wounds-the-systematic-sinhalization-of-sri-lanka_s-north-east-and-hill-country.pdf.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.