வவுனியா இந்துக் கல்லூரி

வவுனியா இந்துக் கல்லூரி இலங்கையின் வவுனியா கோவில்குளத்தில் உள்ளது. இறம்பைக்குளம் தபால் பெட்டி சந்தியில் இருந்து உமாமகேஸ்வரன் வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பள்ளியில் சுமார் 850 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். இங்கு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் (கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு) வரை உள்ளது. இது ஒரு நவோதயா பாடசாலையாகும்.