வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்

அருள்மிகு சிறீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்து திருகோணமலை செல்லும் வீதியில் (ஹொரவபொத்தானை வீதி) ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வரும் இறம்பைக்குளம் சந்தியில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஆசிகுளம் வீதியில் (இதற்கு சிதம்பரபுரம் வீதி மற்றும் உமாமகேஸ்வரன் வீதி என்ற பெயர்களும் உண்டு) சுமார் 100 யார் தூரத்தில் அமைந்துள்ளது.

கோயிற்குளம் சிவன் கோயில்

திருக்கோவில் அமைப்பு

தொகு

வடக்கு வீதியில் காஞ்சிச் சிவ மண்டபமும், தெற்கில் அமி்ர்தவர்சிணி தீர்த்தமும் அமையப்பெற்று சுமார் 5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

தலப்பெருமை

தொகு

வவுனியாவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் அமைதியைக் தேடிவருபவர்களுக்கு மிகச் சிறப்பான ஆலயமாக அமைகின்றது.

மூர்த்தி திருநாமம்  :- அகிலாண்டேசுரர் அம்பாள் பெயர்  :- அகிலாண்டேஸ்வரி தலப்பெயர்  :- கோயில்குளம், வவுனியா தீர்த்தம்  :- அமிர்தவர்ஷிணி தலவிருட்சம்  :- திருக்கொன்றை

திருக்கோயில் விழாக்கள்

தொகு

மாதம் தோறும் நடைபெறும் விழாக்களில் பெளர்ணமி, பிரதோசம், சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை), சோமவாரம் (திங்கட்கிழமை) என்பனவாகும்.

  1. சித்திரை - சங்கராந்தித் தீர்த்தம், மணவாளக் கோலம், சித்திரைச் சதயம், அப்பர் குருபூசை
  2. வைகாசி - சங்கராந்தித் தீர்த்தம், வைகாசி விசாகம், முருகப் பெருமான் திரு அவதார விழா மூல நட்சத்திரம், திருஞானசம்பந்தர் குருபூசை
  3. ஆனி - சங்கராந்தித் தீர்த்தம், உத்தர நட்சத்திரம் நடேசர் அபிசேகம்
  4. ஆடி - சங்கராந்தித் தீர்த்தம், ஆடிப் பூரமாக அந்தமாகக் கொடு அம்பாளுக்கு பத்துநாள் உற்சவம், சுவாதி நட்சத்திரம், சுந்தரர் குருபூசை
  5. ஆவணி - சங்கராந்தித் தீர்த்தம், ஆவணி சதுர்த்தி விநாயகர் விழா, மூல நட்சத்திரம் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த விழா, ஆவணி ஓணம் அம்பாள் உற்சவம்
  6. புரட்டாதி - சங்கராந்தித் தீர்த்தம், நவராத்திரி விழா 10 நாட்கள்
  7. ஐப்பசி - சங்கராத்தித் தீர்த்தம், கந்தஷட்டி விழா,
  8. கார்த்திகை - சங்கராந்தித் தீர்த்தம், பிள்ளையார் பெருங்கதை
  9. மார்கழி - சங்கராந்தித் தீர்த்தம், திருவெம்பாவை, திருவாதிரை, ஆருத்திரா தரிசனம்
  10. தை - சங்கராந்தித் தீர்த்தம், தைப்பொங்கல், தைப்பூசம், தை அமாவாசை, அபிராமிப் பட்டர்
  11. மாசி - சங்கராந்தித் தீர்த்தம், சிவராத்திரி விழா, மாசி மகம்
  12. பங்குனி - சங்கராந்தித் தீர்த்தம், பங்குனி உத்தரத்தை அந்தமாகக் கொண்டு 15 நாட்கள் சுவாமி உற்சவம்

சமூகப் பணி

தொகு

சிறப்பான திருமண மண்டபங்கள் இரண்டு அமைக்கப் பட்டு சைவ சமய அடிப்படையில் செய்வதற்கான வசதிகள் அமைந்துள்ளன.

  • காஞ்சிச் சிவ மடம்: இதில் இந்து சமய முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
  • அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபம்: இது நவீன முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

அனாதரவற்ற சிறுவர்களை அரவணைக்கும் முகமாக சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக சிறுவர் இல்லங்கள் அமைக்கப்பட்டு ஆலய அறங்காவலர் சபையினரின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது.

பேருந்து வழி

தொகு

வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் பேருந்தில் கோவில்குளம் சிவன் கோவில் என்ற தரிப்பில் இறங்க வேண்டும்.

மகா கும்பாபிஷேகப் பெருவிழா

தொகு

இவ்வாலயத்தின் கோவில் மறுசீரமைப்பிற்குப்பின் சிலையை அதனிடத்தில் வைக்கும் (புனராவர்த்தனப் பிரதிஸ்டா கும்பாபிஷேகம்) திருவிழா 09 ஜூலை 2008 அன்று நடைபெற உள்ளது. 16 மே 2008 அன்று யந்திரபூசைகள் ஆரம்பமாக உள்ளது. தற்போது ஆலயத்தில் மீளமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. மிகப்பெரிய யாகத்திற்கான ஓம குண்டலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.

உசாத்துணை

தொகு
  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்

8°44′43.61″N 80°30′29.98″E / 8.7454472°N 80.5083278°E / 8.7454472; 80.5083278