யார் (நீள அலகு)

(யார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யார் (yard) என்பது, இம்பீரியல் அலகு முறை, ஆங்கில அலகு முறை, ஐக்கிய அமெரிக்க அலகு முறை ஆகிய அலகு முறைகளில் பயன்படும் ஒரு நீள அலகு ஆகும். பெயர் ஒன்றாக இருப்பினும், எல்லா முறைகளிலுமே இதன் அளவு ஒன்றுக்கொன்று சமமானது அல்ல. மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் யார், அனைத்துலக யார் எனப்படுகின்றது. இது வரைவிலக்கணப்படி 0.9144 மீட்டருக்குச் சமமானது.

நீள அளவுகள் குறிக்கப்பட்ட விட்ருவிய மனிதன்

இந்த அலகு, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காற்பந்து விளையாட்டுக்கான களத்தின் நீள அளவுகளைக் குறிக்கப் பயன்படுகின்றது. மீட்டர் அளவு முறையின் அறிமுகத்துக்கு முன்னர் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், துணி வகைகளின் அளவுகள் யார் அலகிலேயே அளக்கப்பட்டன.

பிற அலகுகளுடனான தொடர்பு

தொகு
 
இலண்டனில் உள்ள கிரீனிச் ரோயல் அவதானிப்பு நிலையத்தில் (Royal Observatory Greenwich) உள்ள சுவரில், 1 யார் (3 அடி), 2 அடி, 1 அடி, 6 அங்குலங்கள் (1/2 அடி), மற்றும் 1 அங்குலம் ஆகிய நீள அலகுகள் குறிக்கப்பட்டுள்ளன.

இம்பீரியல் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:

1 யார் = 3 அடி
1 யார் = 36 அங்குலம்
22 யார் = 1 சங்கிலி
1760 யார் = 1 மைல்

மீட்டர் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:

1 யார் = 0.9144 மீட்டர்
1 யார் = 91 சதம மீட்டர்
1609 யார் = 1 கிலோமீட்டர்

வேறு சில அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:

1 யார் = 4 சாண்
1 யார் = 2 முழம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யார்_(நீள_அலகு)&oldid=3846326" இலிருந்து மீள்விக்கப்பட்டது