வவுனியா விபுலாநந்தா கல்லூரி

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரி அல்லது வ/வி/க (ஆங்கிலத்தில்: Vavuniya Vipulanantha College) என்பது வடமாகாணத்தினால் நிறுவக்கிகப்படும் ஒரு அரசாங்க இலவச பாடசாலையாகும். இந்த பாடசாலையானது வவுனியா மாவட்டத்தின் பண்டாரிகுளம் உபநகரில் அமைந்துள்ளது.

வவுனியா விபுலாநந்தா கல்லூரி
Vavuniya Vipulanantha College
முகவரி
113 பாடசாலை வீதி
பண்டாரிகுளம்
வவுனியா, வடக்கு மாகாணம், 43000
இலங்கை
அமைவிடம்8°45′26″N 80°28′59″E / 8.7570989°N 80.482968°E / 8.7570989; 80.482968
தகவல்
பழைய பெயர்கள்1. வவுனியா பண்டாரிகுளம் தமிழ் அரசினர் கலவன் பாடசாலை
2. விபுலாநந்தா வித்தியாலயம்
3. விபுலாநந்தா மகா வித்தியாலயம்
4. விபுலாநந்தாக் கல்லூரி
வகைஅரசாங்க இலவச பாடசாலை 1AB
குறிக்கோள்கேடில் செல்வம் கல்வி
சமயச் சார்பு(கள்)சைவநெறி
நிறுவல்1958; 66 ஆண்டுகளுக்கு முன்னர் (1958)
நிறுவனர்திரு. வே சுப்பிரமணியம்
பள்ளி மாவட்டம்வவுனியா மாவட்டம்
ஆணையம்கல்வி அமைச்சு, இலங்கை
பள்ளி இலக்கம்1302006
அதிபர்திருமதி ஞானமதி
(2023-)
தரங்கள்1 - 13
பால்கலவன்
வயது5 to 19
மொத்த சேர்க்கை2200
மாணவர்:ஆசிரியர் விகிதம்55:3
மொழிதமிழ் மொழி
பள்ளி நேரம்6 மணித்தியாலம்
கீதம்வாழிய வவுனியா விபுலாநந்தாக் கல்லூரி வாழிய வாழியவே!
சுருக்கப்பெயர்வ/வி/க
V/V/C
வலயக்கல்விப் பணிப்பாளர்திருமதி அன்னமலர் சுரேந்திரன்
வவுனியா தெற்கு கல்வி வலயம்
பாடசாலை நிறங்கள்
  
கடும் சிவப்பும் மஞ்சளும்
போட்டிப் பாடசாலைவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
மாணாக்கர் பொதுப்பெயர்விபுலன்ஸ்
சஞ்சிகைவிபுலம்

வரலாறு தொகு

1958 இல் முதன்முதலில் இந்தப் பாடசாலையானது, பண்டாரிகுளம் கிராமத்திலே அங்கு வாழ்ந்த திரு.வே சுப்பிரமணியம் ஐயாவினால் வழங்கப்பட்ட நன்கொடை நிலத்திலே முதல் அதிபர் செல்வி பரமேஸ்வரி செல்லத்துரை அவர்களின் அதிபர் வழிகாட்டுதலின் பேரில் நூற்று ஐம்பது மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்களுடன் கொண்டு செல்லப்பட்டது. ஆரம்ப காலத்தில் பெயரின்றியே இந்தப் பாடசாலை இயங்கியது. 1962 களில் இந்தப் பாடசாலையானது, தனது முதலாவது கட்டடத்தை பெற்றதோடு, வவுனியா பண்டாரிகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரையும் பெற்றது. 1962 இல் இந்தப் பாடசாலையானது ஒன்று முதல் ஐந்து வரை கற்பிக்கும் ஆரம்பப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

1975 ஆம் ஆண்டில் இந்தப் பாடசாலையிலயே கா. பொ. த சாதாரண தர பரீட்சை நடைபெற அனுமதியும் வழங்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் 275 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றனர். 1990 களில் ஏற்பட்டஉள்நாட்டுப்போர் இடம்பெயர்வு காரணமாக மாணவர்கள் எண்ணிக்கை 750 ஆக அதிகரித்தது. 2000ங்களின் தொடக்கம் வரை இந்தப் பாடசாலையானது கனிஷ்ட, சிரேஷ்ட என்ற இரு பாடசாலையாகக் காணப்பட்டது.

திரு க. பரமநாதர் அவர்களின் தலைமையின் கீழ் பாடசாலை இருந்த போது இன்றுள்ள இலட்சினையும், பாடசாலை கீதம், கொடி என்பன உருவாக்கப்பட்டது. 1993 இல் விபுலாநந்தா வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. அக்காலப்பகுதியில் உயர்தர கலை, வர்த்தக பிரிவு தொடங்கப்பட்டது. பின்னர் 1996 இல் இப்படசாலையானது 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட அதேவேளை விபுலாநந்தா மகா வித்தியாலயம் என்று மீளவும் பெயர் மாற்றமுற்றது.

அதிபர் திரு. சீ.வி பேரம்பலம் அவர்களின் காலத்தில் பாடசாலை உயர்ச்சிப் படியில் ஏறத்தொடங்கியது. 2002 காலப்பகுதியில் உயிரியல், கணித விஞ்ஞான பிரிவுகளும் இப்பாடசாலையில் அனுமதிக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் பாடசாலை மீளவும் இறுதியாக விபுலாநந்தாக் கல்லூரி என்று பெயர் மாறியது. 2005 களுக்கு பிற்பட்ட காலத்தில் விபுலாநந்தாக் கல்லூரியின் வளர்ச்சி அபரிவிதமானது. வலய, கோட்ட, மாவட்ட, மாகாண, தேசிய மட்ட போட்டிகளில் இப்பாடசாலை பதக்கங்களை வென்று குவிக்கத் தொடங்கியது. இன்று விபுலாநந்தாக் கல்லூரி வவுனியா மட்டுமின்றி வடமாகாணத்தில் அதிகளவு மாணவர்கள் கற்கும் இரண்டாவது பாடசாலையாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு பின் உள்ளது. இன்று கல்வியில் சிறந்து விளங்கும் இப்பாடசாலையில் 2200 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். தற்போது இது ஒரு 1AB பாடசாலை ஆகும்.

அமைவிடம் தொகு

வவுனியா நகரிலிருந்து சுமார் 1.5 கீ. மீ தொலைவில் பண்டாரிகுளம் என்னும் உபநகரில் அமைந்துள்ளது. இந்த பாடசாலையின் வீதிக்கு வடக்கே சமாந்தரமாக வவுனியா-மன்னர் A30 பெருவீதி செல்கின்றது.

நிருவாகம் தொகு

பாடசாலையானது, இலங்கை கல்வி அமைச்சினால் நிறுவகிக்கப்படுகிறது. வடமாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வவுனியா தெற்கு கல்விப் பணிமனை, கூட்டாக சேர்ந்து அதிபரை நியமிக்கும். பாடசாலையின் பொறுப்புகள் அனைத்தும் அதிபரையே சாரும். அதிபருக்கு உதவி செய்ய இரு பிரதி அதிபர்கள். அவர்கள் ஆரம்பப் பிரிவுக்கு ஒருவர், மேற்பிரிவுக்கு ஒருவர் என கடமையாற்றுவர்.

பாடசாலை மாணவர்களை நிருவகிப்பதில் மாணவத்தலைவர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். கா. பொ. த உயர்தரத்தை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களே மாணவத்தலைவர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

பாடசாலையில் தமிழ் மொழி மூலமே கல்வி கற்பிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் 2014 களில் பரீட்சார்த்தமாக ஆங்கில மொழி இருமொழி போதனை கொண்டு வரப்பட்டது, எனினும் மாணவர்கள் பெரிதும் ஊக்கம் காட்டமையால் 2016 இல் இந்த நடைமுறை கைவிடப்பட்டது.