பாம்பன் தீவு

பாம்பன் தீவு (Pamban Island) என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேசுவரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும்.

பாம்பன் தீவு
—  island  —
பாம்பன் தீவு
இருப்பிடம்: பாம்பன் தீவு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°15′N 79°18′E / 9.25°N 79.3°E / 9.25; 79.3ஆள்கூறுகள்: 9°15′N 79°18′E / 9.25°N 79.3°E / 9.25; 79.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 50,000+ (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


10 மீட்டர்கள் (33 ft)

புவியியல்தொகு

பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து தனுஷ்கோடியின் தென்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் தனுஷ்கோடி முதல் இராமேசுவரம் வரை 2 கிமீ முதல் 7 கிமீ வரை பரந்துள்ளது.

பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, பாம்பன், இராமேசுவரம் என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன[4]. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: பாம்பன், இராமேசுவரம் என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் தொடருந்து நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட தங்கச்சிமடம், இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் இராமேசுவரத்தில் உள்ளது. இராமேசுவரம் பாம்பன் நகரில் இருந்து 11 கிமீ தூரத்திலும், தனுஷ்கோடியில் இருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Detailed map of Rameswaram taluka
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பன்_தீவு&oldid=3067220" இருந்து மீள்விக்கப்பட்டது