பாக்கு நீரிணை

பாக்கு நீரிணை (Palk Strait) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே வங்காள விரிகுடாவை, தென்மேற்கே பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது.[1] இந்நீரிணை 53 முதல் 82 கிலோமீட்டர்கள் (33 முதல் 51 மைல்கள்) அகலமானது.[2] தமிழ்நாட்டின் வைகை உட்படப் பல ஆறுகள் இந்நீரிணையுடன் கலக்கின்றன. கம்பனி ஆட்சிக் காலத்தில் சென்னையின் ஆளுநராக (1755–1763) இருந்த இராபர்ட் பாக் என்பவரின் பெயரில் இந்நீரிணை அழைக்கபப்டுகிறது.[3] இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாக்கு நீரிணை
Palk Strait
பாக்கு நீரிணை is located in South Asia
பாக்கு நீரிணை
பாக்கு நீரிணை
அமைவிடம்இலட்சத்தீவுக் கடல்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்10°00′N 79°45′E / 10.000°N 79.750°E / 10.000; 79.750ஆள்கூறுகள்: 10°00′N 79°45′E / 10.000°N 79.750°E / 10.000; 79.750
வகைநீரிணை
பெயர்க்காரணம்சர் இராபர்ட் பாக்கு
Part ofஇந்தியப் பெருங்கடல்
வடிநில நாடுகள்இந்தியா, இலங்கை
அதிகபட்ச அகலம்82 கிமீ
குறைந்தபட்ச அகலம்53 கிமீ
Surface area2500 கிமீ
அதிகபட்ச வெப்பநிலை35 °C (95 °F)
குறைந்தபட்ச வெப்பநிலை15 °F (−9 °C)
Islandsஇலங்கை
பாக்கு விரிகுடாவை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கும் ஆதாமின் பாலம்

புவியியல்தொகு

பாக்கு விரிகுடாவின் தெற்கு முனையில் தாழ் தீவுக்கூட்டங்களாலும், ஆழமற்ற பவளப் படிப்பாறைகளாலும் பதிக்கப்பெற்று கூட்டாக ஆதாமின் பாலம் என அழைக்கப்படுகின்றது.[3] இது வரலாற்று ரீதியாக இந்து புராணங்களில் "ராம் சேது", அல்லது இராமர் பாலம் என்று அறியப்படுகிறது.[4] இந்த சங்கிலித் தொடர் தமிழ்நாட்டின் பாம்பன் தீவில் உள்ள தனுஷ்கோடிக்கும் (இராமேசுவரம் தீவு என்றும் அழைக்கப்படுகிறது), இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையில் நீண்டுள்ளது. இராமேசுவரம் தீவு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

  1. Map of Sri Lanka with Palk Strait and Palk Bay
  2. கூகுள் எர்த் மூலம் தூரம் அளக்கப்பட்டது.
  3. 3.0 3.1    "Palk Straits". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 20. (1911). Cambridge University Press. 
  4. "Adam's bridge". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2007. 2007-09-14 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கு_நீரிணை&oldid=2924723" இருந்து மீள்விக்கப்பட்டது