பாம்பன் பாலம்

பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாகும். இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டுவருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் மும்பையில் உள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம்). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும். முதன் முதலில் ஆங்கிலேயர்களால் கட்டப்ட்ட தொடருந்து பாலத்தையே பாம்பன் பாலம் என குறிப்பிடபடுகிறது.

பாம்பன் பாலம்
பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம்
அதிகாரப் பூர்வ பெயர் அன்னை இந்திரா காந்தி பாலம்
போக்குவரத்து 2 வழி சாலை போக்குவரத்து
தாண்டுவது பாக்கு நீரிணை
இடம் ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
அமைவு 9°16′56.70″N 79°11′20.1212″E / 9.2824167°N 79.188922556°E / 9.2824167; 79.188922556

தொடருந்துப் பாலம் தொகு

இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்துப் பாலமாகும். இதன் நீளம் 2.3 கி.மீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் நடுவில் திறக்கும் வாசல் வழியாகச் செல்கின்றன.

பேருந்து பாலம் தொகு

திட்டமிடலும் கட்டுமானமும் தொகு

 
பாம்பன் பாலம்

பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது.[1] இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டிண வடிவுப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.

அன்றைய பிரித்தானிய அரசு இலங்கையுடன் வணிக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான வழிகளை நாடியதால்,[2] 1870-இல் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலத்திற்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.[3] 1911 ஆகத்து மாதத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 அன்று பாலம் திறக்கப்பட்டது.[4] அருகிலுள்ள சாலைப் பாலம் 1988 இல் திறக்கப்பட்டது.[2] 2018 திசம்பர் 5 நிலவரப்படி, பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பாலம் மூடப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[5] இந்திய இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ₹250 கோடி செலவில் பழைய பாம்பன் பாலத்தின் அருகே புதிய தொடருந்துப் பாலம் கட்டப்படும் என்று அறிவித்தார்.[6] இந்தப் புதிய இரட்டைப் பாதைப் பாலம், ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்கள் இந்தப் பாலத்தைக் கடந்து செல்லும் வகையில், வாகனப் பயன்முறையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமானப் பொருட்கள் தொகு

  • பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிக் கற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும் மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.
  • இதனைக் கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.

புதுப்பித்தல் தொகு

தொடக்கத்தில் குறுகிய அகலத் தொடருந்துகள் (Meter Guage)செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் (Broad Gauge) செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகஸ்ட் 12இல் புதுப்பித்தது[1]. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.[7].

வலிமை தொகு

பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. அத்துடன் இப்பகுதி கடல் கொந்தளிப்பு (Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்[1] 1964இல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

 

கப்பல்கள் செல்வதற்காகத் திறக்கும் 'கேன்டில் லீவர்' பகுதி.

அமைவு தொகு

பாக்கு நீரிணையில் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் முதல் பாலமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 The Hindu Business Line : Pamban Bridge to be pulled down for gauge conversion
  2. 2.0 2.1 "Pamban bridge: 10 awesome facts about India's first sea bridge". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/slideshows/infrastructure/pamban-bridge-10-awesome-facts-about-indias-first-sea-bridge/commissioned-on-february-24-1914/slideshow/25683764.cms. 
  3. "Pamban Bridge, Pamban Railway Bridge". My Rameswaram இம் மூலத்தில் இருந்து 2019-06-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190627083903/http://www.myrameswaram.com/pamban-railway-bridge. 
  4. Lalvani, Kartar (2016). The Making of India: The Untold Story of British Enterprise. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4729-2483-4. 
  5. "Train Services from Rameswaram to Mandapam Suspended due to Crack in Pamban Bridge". 2018-12-18 இம் மூலத்தில் இருந்து 2019-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301140242/https://press108.online/india/train-services-from-rameswaram-to-mandapam-suspended-due-to-crack-in-pamban-bridge/. 
  6. "Ministry of Railways confirms New Bridge in Pamban". 2018-12-25 இம் மூலத்தில் இருந்து 2019-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301140327/https://press108.online/india/ministry-of-railways-confirms-new-bridge-in-pamban/. 
  7. The Hindu : Kalam inaugurates centenary celebrations of Pamban bridge

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பன்_பாலம்&oldid=3589739" இருந்து மீள்விக்கப்பட்டது