புதிய பாம்பன் பாலம்

புதிய பாம்பன் பாலம் என்பது இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பில் உள்ள மண்டபம் நகரத்தை பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் உடன் இணைக்கும் ஒரு தொடருந்துப் பாலமாகும்.[1] இந்தப் புதிய பாலம் 1914 இல் திறக்கப்பட்ட பாம்பன் பாலத்திற்கு அருகில் கட்டப்பட்டு வருகின்றது. 2.07 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய பாலம் ஏறத்தாழ 100 தூண்களைக் கொண்டுள்ளது.[2]

புதிய பாம்பன் பாலம்
போக்குவரத்து தொடருந்து
இடம் ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
மொத்த நீளம் 2.07 கி.மீ.
கட்டுமானம் தொடங்கிய தேதி பிப்ரவரி 2020
அமைவு 9°16′57.25″N 79°12′5.91″E / 9.2825694°N 79.2016417°E / 9.2825694; 79.2016417

2019 ஆம் ஆண்டில், பழைய பாம்பன் பாலம் பாலத்தின் வயது மற்றும் பராமரிப்பில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு இணையாக ஒரு புதிய பாலத்தை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. 2019 நவம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். ₹540 கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[3] கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. பாலத்தின் நடுவில் உள்ள இரண்டு பதாகைகள் கப்பல்கள் எளிதில் கடந்து செல்ல ஏதுவாக தானியங்கி முறையில் தூக்கும் திறன் கொண்டவை.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பாம்பன்_பாலம்&oldid=3911968" இலிருந்து மீள்விக்கப்பட்டது