மண்டபம் பேரூராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம்

மண்டபம் (ஆங்கிலம்:Mandapam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.

மண்டபம்
மண்டபம்
அமைவிடம்: மண்டபம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E / 9.28; 79.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

18,427 (2011)

3,685/km2 (9,544/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

9 மீட்டர்கள் (30 அடி)

இணையதளம் www.townpanchayat.in/mandapam

இராமநாதபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் மண்டபம் உள்ளது. மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் மண்டபம் முகாம் (Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது.[4]. இந்தியாவில் பெரிய மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் இங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கி.மீ. தொலைவில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,296 வீடுகளும், 18,427 மக்கள்தொகையும் கொண்டது.[5]

இது 5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட மண்டபம் பேரூராட்சியானது, இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

பொருளாதாரம்

தொகு

மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.

கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் , காட்சிக்கூடமும் உள்ளன. மண்டபத்திற்கு அருகில் குருசடை தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.

மண்டபத்திற்கும், இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், ஒரு தொடக்கநிலை சுகாதார மையம், ஒரு சந்தை உள்ளது.

மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்கள்

தொகு

கிழக்கில்

தொகு
  1. பாம்பன்
  2. அக்காள்மடம்
  3. முஹம்மதியார் புரம்
  4. தங்கச்சிமடம்
  5. இராமேஸ்வரம்

மேற்கில்

தொகு
  1. மண்டபம் முகாம்
  2. மரைக்காயர் பட்டிணம்
  3. வேதாளை
  4. சுந்தரமுடையான் (சீனியப்பா தர்ஹா)
  5. அரியமான்
  6. பிரப்பன் வலசை
  7. உச்சிப்புளி
  8. பெருங்குளம்
  9. இராமநாதபுரம்

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 9°17′N 79°07′E / 9.28°N 79.12°E / 9.28; 79.12 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=302
  5. மண்டபம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. மண்டபம் பேரூராட்சியின் இணையதளம்
  7. "Mandapam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டபம்_பேரூராட்சி&oldid=4250669" இலிருந்து மீள்விக்கப்பட்டது