இராமநாதபுரம் வட்டம்
இராமநாதபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் இராமநாதபுரம் நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வட்ட நிர்வாகம்
தொகுஇராமநாதபுரம் வட்டம் இராமநாதபுரம், தேவிபட்டனம், பெருங்குளம் மற்றும் மண்டபம் என நான்கு உள்வட்டங்களும், 43 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 399,232 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 202,047 ஆண்களும், 197,185 பெண்களும் உள்ளனர். 92,369 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 56.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 85.03% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 973 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 54,787 மற்றும் 711 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.98%, இசுலாமியர்கள் 27.61%, கிறித்தவர்கள் 2.3% மற்றும் பிறர் 1.10.% ஆகவுள்ளனர். [3]