நீரிணை
நீரிணை (strait) என்பது, இரண்டு பெரிய நீர்ப்பரப்புக்களை ஒரு நிலப்பகுதியூடாக இணைக்கும் ஒடுக்கமான நீர்ப்பரப்பு ஆகும். இதனால் நீரிணை பொதுவாக இரண்டு பெரிய நிலப் பகுதிகளுக்கு இடையே இருக்கும். உலகிலுள்ள பல நீரிணைகள் அனைத்துலகக் கடற் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிப்பதனால் இவை பொருளியல் ரீதியில் முக்கியமானவை. இதனால் இவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகப் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன.
உலகின் முக்கிய நீரிணைகள்
தொகு- டோவர் நீரிணை - இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையில் உள்ளது. வட கடலையும், ஆங்கிலக் கால்வாயையும் இணைக்கிறது.
- ஜிப்ரால்ட்டர் நீரிணை - அத்திலாந்திக் பெருங்கடலுக்கும், மத்திய தரைக் கடலுக்கும் இடையிலுள்ள ஒரே இயற்கைத் தொடுப்பு.
- பொஸ்போரஸ் - மத்திய தரைக் கடலையும், கருங்கடலையும் இணைக்கின்றது.
- மகெல்லன் நீரிணை - அத்திலாந்திக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கின்றது.
- பெரிங் நீரிணை - அலாஸ்காவுக்கும், சைபீரியாவுக்கும் இடையில் உள்ளது. பசிபிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களை இணைக்கின்றது.
- ஹோர்முஸ் நீரிணை - பாரசீகக் குடாவையும், ஓமான் குடாவையும் இணைக்கின்றது. இதனூடாகவே வளைகுடாவின் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது.
- மலாக்கா நீரிணை - மலேசியத் தீவக்குறைக்கும், சுமாத்திராவுக்கும் இடையில் அமைந்துள்ள இது, இந்துப் பெருங்கடலையும், வட சீனக் கடலையும் இணைக்கிறது.
- பாஸ் நீரிணை - இந்துப் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் இது, ஆஸ்திரேலியாவுக்கும், தாஸ்மேனியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது.
- பாக்கு நீரிணை - இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள இந் நீரிணை, இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கிறது.
- டென்மார்க் நீரிணை - கிரீன்லாந்திற்கும் ஐஸ்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீரிணை ஆர்க்டிக் பெருங்கடலின் நீட்டிப்பான கிரீன்லாந்து கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கிறது.
- சிசிலி நீரிணை சிசிலிக்கும் துனிசியாவுக்கும் இடையே அமைந்துள்ளது