முதன்மை பட்டியைத் திறக்கவும்

மகெல்லன் நீரிணை தென்னமெரிக்காவின் சிலி பெருநிலப்பரப்புக்குத் தெற்கில் அமைந்துள்ள நீரிணையாகும். பசுபிக் பெருங்கடலுக்கும் அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள முக்கியமான இயற்கை நீரிணை இதுவாகும். இதன் ஆகக் குறைந்த அகலம் 4 கி.மீ ஆகும். இந்தக் குறுகிய அகலம் மற்றும் ஆபத்தான காலநிலை காரணமாக பயணிப்பதற்குச் சிக்கலான நீரிணையாக உள்ளது. போர்த்துக்கேய நடுகாண் பயணியான பேர்டினன் மகெல்லன் 1520 இல் இந்நீரிணையில் பயணித்த முதல் ஐரோப்பியரானார். 1914 இல் பனாமாக் கால்வாய் வெட்டப்படும்வரை பசுபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையிலானபிரதான பாதையாக இந்நீரிணையே இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகெல்லன்_நீரிணை&oldid=1387003" இருந்து மீள்விக்கப்பட்டது