ஓமான் குடா
ஓமான் குடா, அரபுக் கடலையும் ஹோர்முஸ் நீரிணையையும் இணைக்கும் ஒரு நீரிணை (உண்மையான குடா அன்று) ஆகும்[1]. ஓமான் குடா, ஹோர்முஸ் நீரிணையை இணைத்த பிறகு பாரசீகக் குடாவுக்கு இட்டுச் செல்கிறது. ஓமான் குடா, பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன.

சான்றுகள் தொகு
- ↑ "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. 8 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 February 2010 அன்று பார்க்கப்பட்டது.