கோட்டை (கொழும்பு)

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வணிக மாவட்டம்

கோட்டை, கொழும்பு (Fort (Colombo), කොටුව) இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பின் மத்தியில் உள்ள ஒரு வணிக நகரமாகும். இங்கு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, கொழும்பு உலக வர்த்தக மையம் ஆகியனவும், இலங்கை வங்கியின் தலைமையகம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடங்களும் அமைந்துள்ளன. கோட்டைப் பகுதிக் கடற்கரையோரமாக 1859-இல் பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்ட் என்பவரால் கட்டமைக்கப்பட்ட காலிமுகத் திடலும் அதனை ஒட்டிய கடற்கரையும் அமைந்துள்ளது. இப்பகுதியில் தலைமை அஞ்சலகமும் தங்குவிடுதிகளும், பல அரசுத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன.

கோட்டை
Fort
කොටුව
Fort
மேலிருந்து இடம்-வலமாக: கோட்டையின் வான்பின்னணி, முன்புறத்தில் பழைய நாடாளுமன்றம், பின்னணியில் இலங்கை வங்கி, உ.வ.மை இரட்டைக் கோபுரங்கள், கிராண்ட் ஓரியண்டல் விடுதி, கார்கில்சு பல்பொருள் அங்காடி, பழைய கொழும்பு இடச்சு மருத்துவமனை, பழைய கொழும்பு கலங்கரை விளக்கம், புதுப்பிக்கப்பட்ட காலனித்துவ கால கட்டடங்கள், உலக வர்த்தக மையம், ஹில்டன் கொழும்பு விடுதி
கோட்டை Fort is located in Central Colombo
கோட்டை Fort
கோட்டை
Fort
கோட்டை Fort is located in இலங்கை
கோட்டை Fort
கோட்டை
Fort
ஆள்கூறுகள்: 6°55′33″N 79°50′30″E / 6.92583°N 79.84167°E / 6.92583; 79.84167
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
00100 [1]

பிரம்மஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான கர்னல் என்றி ஒல்கொட்டின் சிலை கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Postal Code of Fort None". 2012-05-30. Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.
  2. HISTORICAL CONTEXT, இலங்கை, அமெரிக்கத் தூதரக இணையதளம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டை_(கொழும்பு)&oldid=3903062" இலிருந்து மீள்விக்கப்பட்டது