பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் (Old Colombo Lighthouse) அல்லது கொழும்பு கோட்டை மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகவும் கொழும்பில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தது. கலங்கரை விளக்கம் இப்போது செயல்படவில்லை. ஆனால் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாக செயல்படுகிறது. இது கொழும்பு கோட்டையில் சதாம் தெருவும், சனாதிபதி மாவத்தை (முன்பு இராணியின் சாலை) சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.
மணிக்கூட்டுக் கோபுர கலங்கரை விளக்கம் | |
மத்திய கொழும்பில் அமைவிடம் | |
அமைவிடம் | கோட்டை கொழும்பு இலங்கை |
---|---|
ஆள்கூற்று | 6°56′5″N 79°50′34″E / 6.93472°N 79.84278°E |
கட்டப்பட்டது | 1829 (முதல்) |
ஒளியூட்டப்பட்டது | 1865 |
தானியக்கம் | இல்லை |
முடக்கம் | 1952 |
கட்டுமானம் | கல் கோபுரம் |
கோபுர வடிவம் | பால்கனியும் விளக்கும் கொண்ட சதுர வடிவ கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | கல், சாம்பல் வண்ண உலோக விளக்கு கொண்ட வெள்ளை கோபுரம் |
உயரம் | 29 m (95 அடி) |
ARLHS எண் | SLI-021 |
வரலாறு
தொகுஇந்த கோபுரம் 1856-57ஆம் ஆண்டில் மணிக்கூட்டுக் கோபுரமாக கட்டப்பட்டது. மேலும், 25 பிப்ரவரி 1857இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்தை ஆளுநர் சர் என்றி யோர்ஜ் வார்டின் மனைவி (1797 - 1860) எமிலி எலிசபெத் வார்டு என்பவர் வடிவமைத்தார். [1] திரு யான் பிளெமிங் சர்ச்சில் (பொதுப்பணித்துறை தலைமை இயக்குநர்) மேற்பார்வையில் பொதுப்பணித் துறையால் இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 29 மீட்டர் உயரமுள்ள (95 அடி) கோபுரம் அந்த நேரத்தில் கொழும்பில் மிக உயரமான அமைப்பாக இருந்தது. [2] அசல் கடிகாரம் 1814ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் சர் இராபர்ட் பிரவுன்ரிக் (1759 - 1833) அவர்களால் £ 1,200 செலவில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பொருளாதாரக் காரணங்களால், 1857ஆம் ஆண்டு இறுதியாக நிறுவப்படும் வரை திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டது.
அருகிலுள்ள கட்டிடங்களால் அதன் ஒளி மறைந்து பின்னர் சூலை 12, 1952 இல் நிறுத்தப்பட்ட பின்னர் கலங்கரை விளக்கம் செயலிழக்கப்பட்டது. [3] நவீன காலி பக் கலங்கரை விளக்கம் அதன் மாற்றாக கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டது.
அம்சங்கள்
தொகுஅசல் கொழும்பு கலங்கரை விளக்கம் கொத்தளத்தின் கடல் விளிம்பில் ஒரு கோட்டையில் அமைந்திருந்தது. இது ஒரு புதிய-பாரம்பரிய கட்டமைப்பாகும். இதில் 23 மீ (75 அடி) மர ஒளி கோபுரம் இரண்டு மாடி வட்ட செங்கல் கட்டிடத்திலிருந்து உயர்ந்து ஒரு விரிவான நெடுவரிசைகளால் சூழப்பட்டுள்ளது. [4] இது 1829ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் 1869க்கும் 1871க்குமிடையில் கோட்டை கோபுரங்களை அகற்றும்போது இடிக்கப்பட்டது. [5]
1852ஆம் ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கடிகாரத்தை ('பிக் பென்') தயாரிப்பதற்கு பொறுப்பான புகழ்பெற்ற ஆங்கில கடிகார தயாரிப்பாளர்களான தென்ட் அவர்களால் இந்த கடிகார வழிமுறை உருவாக்கப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரம் 1857 மார்ச் 25 அன்று முறையாக இயக்கப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரத்திலுள்ள முக்கிய மணி தோராயமாக 250 கிலோ எடையையும் (550 எல்பி), இரண்டு துணை மணிகள் 152 கிலோ (335 எல்பி) எடையையும் கொண்டிருந்தது.
ஊடுருவல் ஒளி 1867 இல் கோபுரத்திற்கு மாற்றப்பட்டது.[6] மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இதன் விளக்கு எரிந்தது. 1907இல் இது வாயுவாக மாற்றப்பட்டது. 1933ஆம் ஆண்டில் இது மின்சாரம் மூலம் இயக்கப்படும் 1,500 மெழுகுவர்த்தி சக்தி ஒளியுடன் மாற்றப்பட்டது.
அக்டோபர் 1913 இல், கடிகாரத்தை மாற்ற வேண்டியிருந்தது. அதில் ஆறு அடி விட்டமுள்ள ஒளிரும் ஓப்பல் கண்ணாடி மெருகூட்டப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரம் ஏப்ரல் 4, 1914 இல் மீண்டும் திறக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Genealogy of Henry George Ward". Daniel Morgan's Genealogy Pages. 31 December 2010. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
- ↑ "Lighthouse Explorer: Colombo Clock Tower". Lighthouse Digest. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
- ↑ Muhaj Hamin, T.M. (4 May 1997). "Let it tick and chime again". The Sunday Times. http://sundaytimes.lk/970504/plus8.html. பார்த்த நாள்: 9 October 2014.
- ↑ Lighthouses: Return to an Address of the Honourable The House of Commons, dated 15 April 1850. House of Commons. 1 August 1850.
- ↑ "Lighthouse, Colombo". பிரித்தானிய நூலகம். பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
- ↑ A Guide to Colombo: With Maps; A Handbook of Information, Useful Alike. 1906. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.