பிரித்தானிய நூலகம்
பிரித்தானிய நூலகம் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய நூலகமும்[2] மற்றும் நூல்களின் தொகுப்புகளின் எண்ணிக்கையில்,[3] உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.[4] இங்கு பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 170 மில்லியன் நூல்களை கொண்டுள்ளது.[5] ஒரு சட்ட வைப்புத்தொகை நூலகமாக பிரித்தானிய நூலகம், ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் தயாரிக்கப்படும் அனைத்து புத்தகங்களின் பிரதிகளையும் மற்றும் இங்கிலாந்தில் விநியோகிக்கப்படும் வெளிநாட்டுப் பாடநூல்களின் கணிசமான அளவு உட்பட பெறுகிறது. இந்த நூலகம் என்பது கலாசார, ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றால் வழங்கப்படும் நிதியில் செயல்படுலிறது.
பிரித்தானிய நூலகம் | |
---|---|
Pictured from the concourse | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
வகை | தேசிய நூலகம் |
தொடக்கம் | 1973 | (1753)
அமைவிடம் | யூஸ்டன் சாலை லண்டன், NW1 |
கிளைகள் | 1 பாஸ்டன் ஸ்பா, மேற்கு யாக்சயர்) |
Collection | |
Items collected | புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இதழ்கள், ஒலி மற்றும் இசைப்பதிவுகள், காப்புரிமைகள், தரவுத்தளங்கள், வரைபடங்கள், தபால்தலைகள், அச்சுப்பதிப்பு, ஓவியங்கள் மற்றும் கையெழுத்துப்பிரதிகள் |
அளவு | சுமார் 174,000,000 பொருட்கள் 13,950,000 புத்தகங்கள்[1] |
Legal deposit | ஆமாம்,
|
Access and use | |
Access requirements | யாவரும் பயன்படுத்தக் கூடிய தொகுப்புகள் மற்றும் சேவைகள் |
ஏனைய தகவல்கள் | |
நிதிநிலை | £142 மில்லியன்கள்[1] |
இயக்குநர் | ரோலி கேடிங் (முதன்மை செயலதிகாரி, 12 செப்டம்பர் 2012 முதல்) |
இணையதளம் | bl.uk |
Map | |
பிரித்தானிய நூலகம், பல்வேறு மொழி நூல்களை கொண்ட ஒரு ஆய்வு நூலகமாக உள்ளது.[6] மேலும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் (சுவடிகள்), பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இதழ்கள், ஒலி மற்றும் இசைப்பதிவுகள், ஓளிப்படங்கள், நாடகம்-கதைப்பிரதிகள், காப்புரிமைகள், தரவுத்தளங்கள், வரைபடங்கள், முத்திரைகள், அச்சுப் பதிப்பு, ஓவியங்கள் போன்ற பல வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[7] நூலகத்தில் சுமார் 14 மில்லியன் புத்தகங்களின் தொகுப்புகள் உள்ளன, இவற்றோடு கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கி.மு. 2000 ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்று பொருட்களின் கணிசமான தொகுப்புகளும் இங்குள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் (ஒவ்வொரு நாளிலும் சுமார் 8,000) பதிப்பு செய்யப்படும் ஒவ்வொரு நூலின் பிரதியொன்றை பெற்றுக்கொள்கிறது. கூடுதலாக நூலகம் நூல்களை கையகப்படுத்துதலுக்கான ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நூலகத்தில், சுமார் 9 மில்லியன் கிலோமீட்டர் (6.0 மைல்) நீலத்திற்கு உள்ள புதிய அலமாரியில் புதிய நூல்களை சேர்க்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 1,200 வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு நூலகத்தில் இடம் உள்ளது.[8][9]
1973 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில், நூலகம் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிரித்தானிய நூலகச் சட்டம் 1972 இன் படி அருங்காட்சியகத்தில் இருந்து நூலகம் தனியாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஆகிய இரண்டும் 1997 ஒரே இடத்தில் இயங்கி வந்தது. தற்போது நூலகம், யூஸ்டன் சாலை, புனித பான்ராஸ், இலண்டனில் செயல்படுகிறது. இந்த நூலகம் யூஸ்டன் மற்றும் புனித பான்ராஸ் இரயில் நிலையம் இடையில் உள்ளது. மேலும் ஒரு ஆவணங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் வாசிப்பு அறை பாஸ்டன் ஸ்பா அருகில், வெதர்பே அருகில், மேற்கு யாக்சயரில் உள்ளது. யூஸ்டன் நூலகக் கட்டிடம், அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுத் தரவுகளுக்காக தரம் 1 என்று பட்டியலிடப்பட்ட உலகில் சிறந்த கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[10]
கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு
தொகுஅடிப்படை தொகுப்புகள்
தொகு1753 ஆண்டில் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆரம்ப கையெழுத்துப் பத்திரங்களை பாதுகாக்க பின்வரும் மூன்று அடிப்படை தொகுப்புகளாக பாதுகாக்கப்பட்டது.[11]
- காட்டன் கையெழுத்துப் பிரிதிகள்
- ஹார்லி கையெழுத்துப் பிரிதிகள்
- சுலோனி கையெழுத்துப் பிரிதிகள்
பிறப் பெயரிடப்பட்ட தொகுப்புகள்
தொகுபிறப் பெயரிடப்பட்ட பிரதிகளின் தொகுப்புகள் பின்வருமாறு உள்ளது.
- அருந்தெல் கையெழுத்துப்பிரதிகள்
- எக்டர்டன் கையெழுத்துப் பிரதிகள்
- கிங் கையெழுத்துப் பிரதிகள்
- லாண்ஸ்டவுன் கையெழுத்துப் பிரதிகள்
- ராயல் கையெழுத்துப் பிரதிகள்
- ஸ்டீபன் ஸீக் தொகுப்பு
- ஸ்டோவ் கையெழுத்துப் பிரதிகள்
கையெழுத்துப் பிரதிகள் அல்லாத பிறத் தொகுப்பு,
- லாரன்ஸ் டியுரல் தொகுப்பு
கூடுதல் தொகுப்புகள்
தொகுகூடுதல் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு என்பது தொடர்ச்சியான பெயரிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பில் இல்லாத கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கியவை, 1756 ஆன்டு முதல் நூலகத்திற்கு நன்கொடையாக பெற்ற பிரதிகள், வாங்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பிற கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுள்ளது. சுலோனி தொகுப்பின் தொடர்ச்சி (வரிசை எண் 1 முதல் 4100) என்று கருதப்பட்டதால் இந்த தொகுப்பின் வரிசை எண் 4101 இருந்து தொடங்குகிறது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 British Library thirty-seventh annual report and accounts 2009/10. 26 July 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-10-296664-0.
- ↑ "Using the British Library". British Library. Retrieved on 17 April 2014.
- ↑ "General information". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
- ↑ "Facts and figures". www.bl.uk. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017.
- ↑ Wight, Colin. "Facts and figures". www.bl.uk. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017.
- ↑ "Using the British Library". British Library. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
- ↑ "The British Library; Explore the world's knowledge". British Library. பார்க்கப்பட்ட நாள் 12 April 2010.
- ↑ The British Library Annual Report and Accounts 2010/11, p.31
- ↑ Wight, Colin. "Facts and figures". www.bl.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
- ↑ "British Library becomes Grade I listed building". BBC News. 1 August 2015. http://www.bbc.co.uk/news/entertainment-arts-33733846. பார்த்த நாள்: 1 August 2015.
- ↑ Nickson, M.A.E. (1998). The British Library: Guide to the catalogues and indexes of the Department of Manuscripts (3rd ed.). London: British Library. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0712306609.
- ↑ "Manuscripts: Ongoing collections". British Library.