காலி

இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்

காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச துடுப்பாட்ட திடல் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. 2004 ஆழிப்பேரலை தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த திடல் புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

காலி
மேல் வலமிருந்து: காலி விகாரை, காலிக் கோட்டை வான் பார்வை, காலிக் கோட்டை உட்புறம், காலி பன்னாட்டு அரங்கம், இடச்சு சீர்திருத்த கிறித்தவ ஆலயம்
மேல் வலமிருந்து: காலி விகாரை, காலிக் கோட்டை வான் பார்வை, காலிக் கோட்டை உட்புறம், காலி பன்னாட்டு அரங்கம், இடச்சு சீர்திருத்த கிறித்தவ ஆலயம்
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
அரசு
 • வகைமாநகர சபை
 • மாநகர முதல்வர்மெத்சிறி டி சில்வா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்99,478
 • அடர்த்தி5,712/km2 (14,790/sq mi)
இனம்Gallians
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேர வலயம்)

காலநிலை

தொகு

இதன் காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையை ஒத்ததாக உள்ளது. இங்கு வறட்சி என தனிக் காலம் இல்லாவிடிலும் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சற்று வறட்சி தென்படும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Galle
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 25
(77)
26
(79)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
26
(79)
பொழிவு mm (inches) 102
(4.02)
86
(3.39)
117
(4.61)
241
(9.49)
297
(11.69)
206
(8.11)
165
(6.5)
155
(6.1)
213
(8.39)
340
(13.39)
302
(11.89)
178
(7.01)
2,403
(94.61)
ஆதாரம்: Weatherbase[1]

மக்கள்

தொகு

காலியின் மக்கள் தொகை 91 000 ஆகும். அதிகமாக சிங்களவர்களே வசிக்கின்றனர். மேலும் தமிழர் முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.

சனத்தொகை (2001)
சனத்தொகை சதவிகிதம்
சிங்களவர்
72.70%
முஸ்லிம்
25.55%
தமிழர்
1.37%
ஏனையோர்
0.38%
Ethnicity Population[2] % Of Total
சிங்களவர் 66,114 72.70
முஸ்லிம் 23,234 25.55
இலங்கைத் தமிழர் 989 1.09
இந்தியத் தமிழர் 255 0.28
ஏனையோர் 342 0.38
மொத்தம் 90,934 100

காலியில் உள்ள வெளிச்சவீடு

தொகு

இங்குள்ள வெளிச்சவீடு பழமை வாய்ந்தது. இது 1934 ஆம் ஆண்டில் தீயினால் அழிந்ததை அடுத்து 1939 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 26.5 மீற்றர், வட்ட இரும்புக்கோபுரமாகவும், மேற்பக்கம் தட்டை உருவம் உடையதாகவும் உள்ளது. கோபுரம் முழுவதும் வெள்ளை நிறத்தாலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்தாலும் நிறம் தீட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Galle, Sri Lanka Travel Weather Averages". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
  2. "Population by Ethnicity according to D.S. Division and Sector: Galle District (Provisional)". Census of Population Housing 2001. Department of Census and Statistics. 2001. Archived from the original on 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
  3. ராஜீவன் (27-06-2010). "காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!". தினகரன். Archived from the original on 2012-01-28. பார்க்கப்பட்ட நாள் 29-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு

காலி மீள் கட்டுமானம் (2005) பரணிடப்பட்டது 2016-10-28 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி&oldid=3931673" இலிருந்து மீள்விக்கப்பட்டது