சிங்களவர் (Sinhalese, සිංහල ජාතිය) (தமிழில் சிங்களர் என்று கூறப்படுவது உண்டு) இலங்கையின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்.

சிங்களவர்
மொத்த மக்கள்தொகை
(18 மில்லியனுக்கு மேற்பட்டது)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை       15,173,820 (74.88%)
(2012)[1]
 ஐக்கிய இராச்சியம்~150,000 (2010)[2]
 ஆத்திரேலியா100,000-க்கு மேல்[3]
 இத்தாலி80,738-க்கு மேல் (2008)[4]
 கனடா70,000-க்கு மேல் (2016)[5]
 ஐக்கிய அமெரிக்கா100,000 (2016)[6][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
 சிங்கப்பூர்60,000 (2016)[7]
 மலேசியா25,000 (2016)[8]
 நியூசிலாந்து30,257 (2016)[9]
 இந்தியாகுறைந்தபட்சம்-55,000[10][11]
மொழி(கள்)
சிங்களம், ஆங்கிலம், தமிழ்
சமயங்கள்
தேரவாத பௌத்தம்
கிறித்தவம்

கி.மு. 5-ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காளம் மற்றும் ஒரிசாவிலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் பாண்டிநாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் இனக்கலப்புகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன.[12] இவர்கள் பொதுவாக, காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும், அயலிலுள்ள திராவிடர்களுடைய அடையாளங்களும், இவர்களிடம் காணப்படுகின்றன.

சிங்களவர் சமயம்

தொகு

பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இவர்கள் இந்துசமயத்தையும், பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகளையும் கைக்கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] சிங்களவரின் சமய அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் சிங்களவர் சமயம் குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களவர்கள் தேரவாத பெளத்த சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பௌத்தம் சிங்களவரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. கந்தன் (முருகன்), பத்தினி (கண்ணகி) போன்ற "தெய்வங்களின்" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து சமயத்துக்கு மாறினார்கள். சிறுபான்மையான சிங்களவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களவர்களும் உள்ளார்கள்.

சிங்கள நாகரிகம்

தொகு

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்த, சிறிய இனமாக இருந்த பொழுதிலும், பழங் காலத்தில் இவர்கள் கட்டியெழுப்பிய நாகரிகம் வியக்கத்தக்கதாகும். உலர் வலயங்களான இலங்கையின் வடமத்திய பகுதிகளில், கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பத்தை அண்டிய காலப்பகுதிகளிலேயே, அவர்களல் கட்டப்பட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள், அக்காலத்தில் அவர்களுடைய தொழில்நுட்ப வல்லமைக்குச் சான்றாகும். மேலும் அனுராதபுரம், பொலனறுவை போன்ற இடங்களிலுள்ள இடிபாடுகளினால் அறியப்படும், அக்கால நகர அமைப்புகளும், பௌத்தவிகாரங்களும், அக்காலக் கட்டிடக்கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சிங்களவர் தமிழர் உறவு

தொகு

சிங்களவர்களும் தமிழர்களும் அருகருகே வசித்து வருவதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலானது. இந்த உறவை நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனாலேயே இலங்கை இனப்பிரச்சினை உருவானதெனலாம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "A2 : Population by ethnic group according to districts, 2012". Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.
  2. Nihal Jayasinghe. (2010). Letter to William Hague MP. Available: http://www.slhclondon.org/news/Letter%20to%20Mr%20William%20Hague,%20MP.pdf Last accessed 3 September 2010.
  3. Australian Government. (2016). Population of Australia. Available: http://www.immi.gov.au/media/publications/research/_pdf/poa-2008.pdf பரணிடப்பட்டது 2008-12-09 at the வந்தவழி இயந்திரம். Last accessed 3 March 2008. The People of Australia – Statistics from the 2006 Census
  4. Italian Government. (2008). Statistiche demografiche ISTAT. Available: http://demo.istat.it/str2008/index.html பரணிடப்பட்டது 2019-11-11 at the வந்தவழி இயந்திரம். Last accessed 3 March 2009.
  5. "TorontoSLSA on Twitter".
  6. Project, Joshua. "Sinhalese in United States".
  7. "Sinhala".
  8. Stuart Michael. (2009). A traditional Sinhalese affair. Available: http://thestar.com.my/metro/story.asp?file=/2009/11/11/central/5069773&sec=central பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம். Last accessed 3 March 2010.
  9. Taonga, New Zealand Ministry for Culture and Heritage Te Manatu. "3. – Sri Lankans – Te Ara Encyclopedia of New Zealand".
  10. Project, Joshua. "Sinhalese in India".
  11. http://www.joshuaproject.net/countries.php?rog3=IN&sf=primarylanguagename&so=asc
  12. Papiha SS, Mastana SS, Purandare CA, Jayasekara R, Chakraborty R (October 1996). "Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent". Human Biology 68 (5): 819–35. பப்மெட்:8908803. https://archive.org/details/sim_human-biology_1996-10_68_5/page/819. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sinhalese people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்களவர்&oldid=4041126" இலிருந்து மீள்விக்கப்பட்டது