சிங்கள பௌத்த தேசியம்

சிங்கள பௌத்த தேசியம் (Sinhala Buddhist nationalism) என்பது சிங்கள கலாச்சாரம், இனம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் கருத்தியல் ஆகும். இது தேராவாத பௌத்தத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இலங்கையின் பெரும்பான்மை இன மக்களான சிங்களரின் நம்பிக்கைப் பெற்ற ஒரு கருத்தியலாகவும் உள்ளது.  இது இனம், சாதி போன்ற கருத்துகளுக்கு எதிராக போராடிய புத்தரின் போதனைகளுக்கு மாறானதாகும். இது பிரித்தானிய பேரரசின் காலனி ஆதிக்கத்தின் விளைவும் ஆகும். அப்போது இன, சமய சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக காட்டப்பட்ட அப்பட்டமான பாகுபாடே இதன் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அதன் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசியவாதம் வளர்ச்சியுற்றது. சிங்கள பௌத்த தேசியவாதமானது சகிப்புத்தன்மையற்ற ஒரு தீவிரவாத சித்தாந்தமாக கருதப்படுகிறது. இது  புத்தரின் போதனைகளான; எல்லேரிடமும் அன்புடனும், கருணையுடனும் இருத்தல் (மித்தா), இரக்கம் (கருணா), மகிழ்ச்சிக்கு ஆட்படாமை (முதிதா),  பற்றற்ற தன்மை (உபிக்கா) ஆகியவற்றுக்கு எதிரானதும் ஆகும்.

அனகாரிக தர்மபாலவின் பங்களிப்புகள்

தொகு

19 ஆம் நூற்றாண்டில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் அனகாரிக தர்மபால  ஆவார். இவர் கிறித்தவ மிஷனரிகளை முன்மாதிரியகக் கொண்டு பௌத்த நிறுவனங்கள் மற்றும் பெளத்த பாடசாலைகளை நிறுவினார். இது 20 ஆம் நூற்றாண்டின் சுதந்திர இயக்கத்திற்கு வழிவகுத்தது. அவர் தன் உரையில்  முதல் மூன்று கருத்துக்களை விளக்கினார்:

"This bright, beautiful island was made into a Paradise by the Aryan Sinhalese before its destruction was brought about by the barbaric vandals. Its people did not know irreligion... Christianity and polytheism are responsible for the vulgar practices of killing animals, stealing, prostitution, licentiousness, lying and drunkenness... The ancient, historic, refined people, under the diabolism of vicious paganism, introduced by the British administrators, are now declining slowly away."[1]

சிங்கள மக்களின் உயர்வுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும் அவர் கால்நடைகளை கொல்வதற்கும், மாட்டிறைச்சி உண்பதையும் கடுமையாக எதிர்த்தும், சைவ உணவுக்கு ஆதரவாகவும் அறைகூவல் விடுத்தார்.

இங்கையில் மற்ற சமயங்களுடன் உறவு

தொகு

சிங்கள பௌத்த தேசியவாதமானது கிருத்தவர் போன்ற மற்ற சமய மக்களுடன் முரண்பாடான உறவைக் கொண்டுள்ளது, கத்தோலிக்க நடவடிக்கை போன்ற இயக்கங்கள் மூலம் நாட்டிலுள்ள கிருத்தவர்கள் செலுத்தும் ஆளுமை மற்றும் குறுக்கீடு போன்றவற்றிற்கு எதிராக பெரும்பாலும் பெளத்த தேசியவாத அமைப்புக்களின் எதிர்ப்புக்கள் ஏற்பட்டன.[2] பௌத்த தேசியவாதிகளுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான உறவுகள் அமைதியானதாகவும் நட்புடனும் இருந்தது, கந்தையா நீலக்கண்டன் மற்றும் தியாகராஜா மகேஸ்வரன் உள்ளிட்ட பல இந்து பிரமுகர்கள்,  மதமாற்ற மசோதாவில் பௌத்த குழுக்களுடன் இணைந்து பணியாற்றினர்.[3] மேலும் இலங்கை இந்து தேசியவாதமும் பெளத்த தேசியவாதமும் கிறித்துவத்துக்கு எதிர்வினையாக இருந்தன என டி. பி. எஸ். ஜெயராஜ் குறிப்பிட்டார்.[4] இந்து-பௌத்த நட்புறவு சங்கம் போன்ற குழுக்களின் எழுச்சியால் இலங்கையில் இந்து-பௌத்தவாத ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.[5]

அமைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • அனகாரிக தர்மபால, Return to Righteousness: A Collection of Speeches, Essays and Letters of the Anagarika Dharmapala, ed. Ananda Guruge, The Anagarika Dharmapala Birth Centenary Committee, Ministry of Education and Cultural Affairs, Ceylon 1965
  • DeVotta, Neil. "The Utilisation of Religio-Linguistic Identities by the Sinhalese and Bengalis: Towards General Explanation". Commonwealth & Comparative Politics, Vol. 39, No. 1 (March 2001), pp. 66–95.
  • Tennakoon Vimalananda 'Buddhism in Ceylon under the Christian powers', 1963
  • Wijewardena 'The Revolt in the Temple', Sinha Publications, 1953

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_பௌத்த_தேசியம்&oldid=3357018" இலிருந்து மீள்விக்கப்பட்டது