தேரவாத பௌத்தம்
பௌத்த மதத்தின் மிகப் பழமையான பிரிவு
தேரவாதம் (பாளி: थेरवाद, சமஸ்கிருதம்: स्थविरवाद ஸ்தாவிரவாத) பௌத்தத்தில் மிக பழமையான பிரிவு. பெரும்பான்மையாக மரபுவழி பௌத்தத்துக்கு ஓரளவு சமமாக இருக்கிறது.[1] இலங்கை மக்களின் 70 சதவீதம் இச்சமயத்தைச் சேர்ந்தவராவர். கம்போடியா, தாய்லாந்து. லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும், பெரும்பான்மையாகத் தேரவாதத்தைப் பின்பற்றுகின்றனர். தென்மேற்கு சீனா, வியட்நாம், வங்காளதேசம், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சிறுபான்மை மக்கள் தேரவாதத்தைச் சேர்ந்தவர் ஆவர். உலகிலேயே ஏறத்தாழ 100 மில்லியன் மக்களால் தேரவாதம் பின்பற்றப்படுகிறது.