ஜாதிக எல உறுமய

ஜாதிக ஹெல உறுமய (Jathika Hela Urumaya, சிங்களம்: ජාතික හෙළ උරුමය, தேசிய மரபுக் கட்சி), என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். இது பௌத்த பிக்குகளைத் தலைவர்களாகக் கொண்ட இக்கட்சி 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கலத் தேசியவாதக் கட்சியான சிஹல உறுமய என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்களாக கொலன்னாவ சுமங்கல தேரோ, உடுவே தம்மலோக்க தேரோ, எல்லாவல மெத்தானந்த தேரோ, டாக்டர். சோபித்த தேரோ, திலக் கருணாரத்தின ஆகியோர் உள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய
செயலாளர்ஒமால்ப்பே சோபித்த
தொடக்கம்பெப்ரவரி 2004
முன்னர்சிங்கள மரபு
தலைமையகம்047/3ஏ டென்சில் கொப்பேக்கடுவ மாவத்தை, பத்தரமுல்லை
தேசியக் கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இலங்கை நாடாளுமன்றம்
3 / 225
தேர்தல் சின்னம்
Conch Shell
இலங்கை அரசியல்

2004, ஏப்ரல் 2 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் முதல் தடவையாகப் போட்டியிட்டு மொத்தமாக 6.0% வாக்குகளைப் பெற்று 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 9 இடங்களைக் கைப்பற்றியது. இவர்களில் 8 உறுப்பினர்கள் 2007 ஆம் ஆண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தனர். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதிக_எல_உறுமய&oldid=3213677" இலிருந்து மீள்விக்கப்பட்டது