காலிமுகத் திடல்

காலிமுகத்திடல் என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி முகத்திடல் ஆகும். பிரித்தானிய கவர்னர் சேர் ஹன்ரி வார்ட் என்பவரின் முயற்சியின் பலனாக 1857 ஆம் ஆண்டு உருவானதுதான் காலிமுகத் திடல். கொழும்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்த இடமாக இது உள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்ற உல்லாசப் பயணிகளும் காலிமுகத் திடலுக்கு தவறாமல் வருவதுடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்கள் நிச்சயம் ஒரு முறையேனும் காலிமுகத் திடலுக்கு வருகை தந்தே தீருவார்கள்.

கொழும்பு காலிமுகத்திடலின் தோற்றம்

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிமுகத்_திடல்&oldid=1547036" இருந்து மீள்விக்கப்பட்டது