கொழும்பு மாவட்டம்

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலைநகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.

கொழும்பு மாவட்டம்
கொழும்பு தேர்தல் மாவட்டம்
கொழும்பு மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் மேல் மாகாணம்
தலைநகரம் கொழும்பு
மக்கள்தொகை(2001) 2234289
பரப்பளவு (நீர் %) 699 (3%)
மக்களடர்த்தி 3305 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 4
நகரசபைகள் 3
பிரதேச சபைகள் 6
பாராளுமன்ற தொகுதிகள் 15
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
13
வார்டுகள் 121
கிராம சேவையாளர் பிரிவுகள்

கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.[1][2][3]

கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

தொகு
  1. "What is the wealthiest city in Sri Lanka? (Official 2016 Dataset)". Archived from the original on 2019-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  2. Mills, Lennox A. (1933). Ceylon Under British Rule (1795–1932). London: Oxford University Press. pp. 67–68.
  3. Medis, G. C. (1946). Ceylon Under the British (2nd (revised) ed.). Colombo: The Colombo Apothecaries Co. pp. 39–40.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு_மாவட்டம்&oldid=3893700" இலிருந்து மீள்விக்கப்பட்டது