திருகோணமலை மாவட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்

திருகோணமலை மாவட்டம் (Trincomalee district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை நகரம் இதன் தலைநகரமாகும். திருகோணமலை தேர்தல் மாவட்டம் 3 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 230 கிராமசேவகர் பிரிவுகளையும் 10 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட முன் இம் மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர், சேருவிலை ஆகிய தேர்தல் தொகுதிகளிலிருந்து நான்கு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இவற்றுள் திருகோணமலையும், சேருவிலையும் தலா ஒவ்வொரு உறுப்பினரைத் தெரிவு செய்யும் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகவும் மூதூர் இரண்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இரட்டை உறுப்பினர் தொகுதியாகவும் இருந்தது.[1][2][3]

திருகோணமலை மாவட்டம்
திருகோணமலைத் தேர்தல் மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் கிழக்கு மாகாணம்
தலைநகரம் திருகோணமலை
மக்கள்தொகை(2001) 340,158*
பரப்பளவு (நீர் %) 2727 (7%)
மக்களடர்த்தி 135 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 1
பிரதேச சபைகள் 10
பாராளுமன்ற தொகுதிகள் 3
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
10
வார்டுகள் 12
கிராம சேவையாளர் பிரிவுகள்

திருகோணமலை மாவட்டத்தின் பரப்பளவு 2727 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது நாட்டின் மொத்தப் பரப்பளவின் 4.16% ஆகும்.

அமைவிடம்

தொகு

திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கில் அனுராதபுர மாவட்டமும், தெற்கில் பொலநறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களும், கிழக்கில் கடலும் உள்ளன. புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் இம் மாவட்டத்திலேயே உள்ளது.

மக்கள்தொகை

தொகு

கடைசியாக முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 255,948 ஆகும். இலங்கையில் நடைபெற்ற 2001 ஆண்டுக்கான கணக்கெடுப்பு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முழுமையாக இடம்பெறவில்லை. எனினும் இவ்வாண்டில் இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 340,158 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 1.81% ஆகும்.

திருகோணமலை மாவட்டம் இலங்கையில் மிகக் குறைந்த மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களுள் ஒன்று. 2001 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின் படி இம் மாவட்டத்தின் மக்களடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 138 ஆகும். இலங்கையின் சராசரி மக்களடர்த்தியான 300 என்ற அளவின் பாதியிலும் இது குறைவே.

இம் மாவட்டத்தின் இன அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கீடுகள் இங்கே 93,132 தமிழரும், 85,503 சிங்களவரும், 75,039 சோனகரும் இருந்ததாகக் காட்டுகின்றன. இதன்படி இம் மாவட்டத்தில் வாழும் இவ்வினங்களில் நூற்றுவீத (விழுக்காடு) அளவுகள் முறையே 36.39%, 33.41%, 29.32% ஆகக் காணப்படுகின்றன.

பிரதேச செயலாளர் பிரிவுகள்

தொகு


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
  2. E Greig, Doreen (1987). The reluctant colonists: Netherlanders abroad in the 17th and 18th centuries. U.S.A.: Assen, The Netherlands; Wolfeboro, N.H., U.S.A.. பக். 227. இணையக் கணினி நூலக மையம்:14069213. 
  3. Sivaratnam, C (1964). An outline of the cultural history and principles of Hinduism (1 ed.). Colombo: Stangard Printers. இணையக் கணினி நூலக மைய எண் 12240260. Koneswaram temple. Tiru-Kona-malai, sacred mountain of Kona or Koneser, Iswara or Siva. The date of building the original temple is given as 1580, BCE. according to a Tamil poem by Kavi Raja Virothayan translated into English in 1831 by Simon Cassie Chitty...
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகோணமலை_மாவட்டம்&oldid=4099558" இலிருந்து மீள்விக்கப்பட்டது