மூதூர் தேர்தல் தொகுதி

1989 வரை இலங்கையில் இருந்த தேர்தல் தொகுதி

மூதூர் தேர்தல் தொகுதி (Mutur Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தை உள்ளடக்கியதாகும். இதன் எல்லைகளாக வடக்கில் கட்டுக்குளம் பற்று மற்றும் கடல், கிழக்கே கடல், தெற்கில் கோறளைப் பற்று, மற்றும் வட மத்திய மாகாணம், மேற்கில் வடமத்திய மாகாணம் ஆகியவை அடங்கும்.[1] கொட்டியார் பற்றின் பிரிவுகளான ஈச்சிலம்பற்றை, மல்லிகைத்தீவு, தோப்பூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், மூதூர் கிராமசங்கப் பிரதேசம், தம்பலகாமம் பற்றைச் சேர்ந்த கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம் துறைமுகக் கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கும்.[1]

இத்தேர்தல் தொகுதியில் 60-65% முசுலிம் வாக்காளர்களும், 30-35% தமிழ் வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.[2] இத்தேர்தல் தொகுதியில் இருந்து 1947 முதல் 1956 வரை ஓர் அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்டார். தமிழர் ஒருவரும் இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 1960 மார்ச்சு முதல் இரு அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 தேர்தலில் மூதூர் தொகுதி மீண்டும் ஓர் அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு, சேருவிலை என்ற புதிய தேர்தல் தொகுதி சிங்களவரைப் பெரும்பான்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மூதூர் தொகுதியில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாததாக்கப்பட்டது.[2]

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[3]. 1989 தேர்தலில் மூதூர் தேர்தல் தொகுதி திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1947 ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் ஐக்கிய தேசியக் கட்சி 1947-1952
1952 எம். ஈ. எச். முகம்மது அலி சுயேட்சை 1952-1960
1956
1960 (மார்ச்) தம்பையா ஏகாம்பரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1960-1962
1960 (சூலை)
1962 (சூன்) எம். ஈ. எச். முகம்மது அலி 1962-1970
1965
1970 ஏ. எல். அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி 1970-1977
1977 எம். ஈ. எச். மகரூப் ஐக்கிய தேசியக் கட்சி 1977-1989

1947 நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் ஐக்கிய தேசியக் கட்சி யானை 3,480 43.98%
  எம். ஈ. எச். முகம்மது அலி கம்யூனிஸ்டு கட்சி தராசு 1,760 22.24%
ஈ. சொக்கலிங்கம் விண்மீன் 1,555 19.65%
ஏ. சி. செல்லராஜா குடை 1,118 14.13%
தகுதியான வாக்குகள் 7,913 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 228
மொத்த வாக்குகள் 8,141
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 16,649
வாக்குவீதம் 48.90%

1952 நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

இலங்கைத் தமிழரசுக் கட்சி சுயேட்சை வேட்பாளர் முகம்மது அலியை இத்தேர்தலில் ஆதரித்தனர்.[2] 24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். ஈ. எச். முகம்மது அலி சுயேட்சை தராசு 6,050 64.51%
  ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் ஐக்கிய தேசியக் கட்சி குடை 3,329 35.49%
தகுதியான வாக்குகள் 9,379 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 119
மொத்த வாக்குகள் 9,498
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 16,705
வாக்குவீதம் 56.86%

1956 நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

இலங்கைத் தமிழரசுக் கட்சி சுயேட்சை வேட்பாளர் முகம்மது அலியை இத்தேர்தலில் ஆதரித்தனர்.[2] 5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எம். ஈ. எச். முகம்மது அலி சுயேட்சை தராசு 10,549 84.72%
ஏ. எச். அல்விஸ் வானூர்தி 1,902 15.28%
தகுதியான வாக்குகள் 12,451 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 114
மொத்த வாக்குகள் 12,565
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,177
வாக்குவீதம் 56.66%

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]: இத்தேர்தலில் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் அளிக்க முடியும். ரி. ஏகாம்பரம், முகம்மது அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ரி. ஏகாம்பரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 10,685 26.73%
எம். ஈ. எச். முகம்மது அலி சுயேட்சை ஏணி 10,680 26.72%
ஏ. எல். அப்துல் மஜீத் தையல் இயந்திரம் 7,540 18.86%
  எஸ். பி. வீரக்கூன் இலங்கை சுதந்திரக் கட்சி கை 6,748 16.88%
  ஏ. எச். அல்விஸ் ஐக்கிய தேசியக் கட்சி யானை 1,488 3.72%
  பி. டி. ஈ. விக்டர் பெரேரா மகாஜன எக்சத் பெரமுன சில்லு 1,165 2.91%
ஜே. ஏ. பி. துரைநாயகம் சுயேட்சை சூரியன் 1,075 2.69%
  ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் இலங்கை சனநாயகக் கட்சி[9] குடை 298 0.75%
என். ரி. பிரான்சிசு சேவியர் சேவல் 295 0.74%
தகுதியான வாக்குகள் 39,974 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,153
மொத்த வாக்குகள் 41,127
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,520
வாக்குவீதம் 144.20%

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]: இத்தேர்தலில் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் அளிக்க முடியும். ரி. ஏகாம்பரம், ஏ. எல். அப்துல் மஜீத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ரி. ஏகாம்பரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 13,304 28.88%
  ஏ. எல். அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி கை 13,247 28.76%
  எம். ஈ. எச். முகம்மது அலி ஐக்கிய தேசியக் கட்சி யானை 11,417 24.78%
எச். டி. எல். லீலாரத்ன ஏணி 7,916 17.18%
  பி. டி. ஈ. விக்டர் பெரேரா மகாஜன எக்சத் பெரமுன சில்லு 181 0.39%
தகுதியான வாக்குகள் 46,065 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 677
மொத்த வாக்குகள் 46,742
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,520
வாக்குவீதம் 163.89%

ரி. ஏகாம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது இறந்து விடவே அவரது இடத்துக்கு மட்டும் 1962 சூன் 28 இல் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் இடம்பெற்றது.

1962 இடைத்தேர்தல்

தொகு

1962 சூன் 28 இடம்பெற்ற இடைத்தேர்தல் முடிவுகள்[11]

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எம். ஈ. எச். முகம்மது அலி இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 14,215 51.31%
  எஸ். ஏ. ஹமீது இலங்கை சுதந்திரக் கட்சி கை 6,903 24.92%
ஆர். எம். குணதிலக விண்மீன் 6,040 21.80%
செ. சுந்தரலிங்கம் ஈழ முன்னணி சூரியன் 423 1.52%
தகுதியான வாக்குகள் 27,699 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 118
மொத்த வாக்குகள் 27,699
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 34.632
வாக்குவீதம் 79.98%

1965 நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]: இத்தேர்தலில் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் அளிக்க முடியும். முகம்மது அலி, ஏ. எல். அப்துல் மஜீத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எம். ஈ. எச். முகம்மது அலி இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 20,237 35.64%
  ஏ. எல். அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி கை 16,726 29.45%
  எச். டி. எல். லீலாரத்ன ஐக்கிய தேசியக் கட்சி யானை 15,328 26.99%
  டி. வி. பவுலிஸ் இலங்கை சுதந்திரக் கட்சி பறவை 3,792 6.68%
ஆர். எம். குணதிலக ஏணி 376 0.66%
  எஸ். எஸ். ஆறுமுகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 327 0.58%
தகுதியான வாக்குகள் 56,786 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,343
மொத்த வாக்குகள் 58,129
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,516
வாக்குவீதம் 150.92%

1969 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. ஆனாலும், அதன் உறுப்பினர் முகம்மது அலி தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து அதற்கு ஆதரவளித்தார். இதனை அடுத்து 1970 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது.[2]

1970 நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]: இத்தேர்தலில் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் அளிக்க முடியும். ஏ. எல். அப்துல் மஜீத், அ. தங்கத்துரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஏ. எல். அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி கை 22,727 29.72%
  அருணாசலம் தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 19,787 25.87%
எச். டி. எல். லீலாரத்ன ஏணி 18,698 24.45%
  எம். ஈ. எச். முகம்மது அலி ஐக்கிய தேசியக் கட்சி யானை 15,018 19.64%
பி. ஜி. சிரிசேன விளக்கு 253 0.33%
தகுதியான வாக்குகள் 76,483 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 705
மொத்த வாக்குகள் 77,188
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 44,176
வாக்குவீதம் 174.73%

1977 நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[14]: இத்தேர்தலில் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எம். ஈ. எச். மகரூப் ஐக்கிய தேசியக் கட்சி யானை 12,530 44.99%
  ஏ. எல். அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி கை 7,800 28.01%
  எஸ். எம். மக்கீன் தமிழர் விடுதலைக் கூட்டணி
(முசுலிம் ஐக்கிய விடுதலை முன்னணி)
சூரியன் 7,520 27.00%
தகுதியான வாக்குகள் 27,850 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 115
மொத்த வாக்குகள் 27,965
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 30,389
வாக்குவீதம் 92.02%

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. 1.0 1.1 "கிழக்கு மாகாணத் தேர்தல் தொகுதிகள்". ஈழநாடு, யாழ்ப்பாணம். 09-01-1960. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Tamil Times, பக்கம். 15, 15 சூலை 1997
  3. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  5. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  6. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  7. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 Also known as the Federal Party
  9. Also known as the இலங்கை சனநாயகக் கட்சி
  10. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  11. "Result of Parliamentary ByElections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04.
  12. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  13. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  14. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதூர்_தேர்தல்_தொகுதி&oldid=3568345" இலிருந்து மீள்விக்கப்பட்டது