ஐக்கிய தேசியக் கட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, United National Party, சிங்களம்: එක්සත් ජාතික පක්ෂය) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார்.
ஐக்கிய தேசியக் கட்சி | |
---|---|
United National Party එක්සත් ජාතික පක්ෂය | |
சுருக்கக்குறி | UNP |
தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
பொதுச் செயலாளர் | அகில விராஜ் காரியவசம் |
நிறுவனர் | டி. எஸ். சேனநாயக்கா |
தொடக்கம் | 6 செப்டம்பர் 1946 |
இணைந்தவை | இலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை |
தலைமையகம் | சிறிகொத்தா, 400 கோட்டே வீதி, பிட்டகோட்டை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை |
இளைஞர் அமைப்பு | தேசிய இளைஞர் முன்னணி |
கொள்கை | பழைமைவாதம் தாராண்மைவாத பழமைவாதம் பொருளாதாரத் தாராண்மைவாதம் |
அரசியல் நிலைப்பாடு | மித-வலதுசாரி அரசியல்[1] |
தேசியக் கூட்டணி | ஐக்கிய தேசிய முன்னணி |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு சனநாயக ஒன்றியம் |
பிராந்தியக் கூட்டு | ஆசியா பசிபிக் சனநாயக ஒன்றியம் |
நிறங்கள் | பச்சை |
இலங்கை நாடாளுமன்றம் | 1 / 225 |
மாகாணசபைகள் | 112 / 417 |
உள்ளாட்சி சபைகள் | 2,385 / 8,293 |
தேர்தல் சின்னம் | |
யானை![]() | |
இணையதளம் | |
www | |
இலங்கை அரசியல் |
கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
- ↑ Tim Hume, CNN (9 January 2015). "Rajapaksa's gamble fails - CNN.com". CNN. http://edition.cnn.com/2015/01/09/intl_homepage1/sri-lanka-elections-result/index.html.