ஐக்கிய தேசிய முன்னணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐக்கிய தேசிய முன்னணி (United National Front), என்பது இலங்கையின் ஒரு அரசியல் கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆரம்பத்தில் இக்கூட்டணியில் இணைந்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2006 ஆம் ஆண்டில் கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தது.
ஐக்கிய தேசிய முன்னணி United National Front | |
---|---|
தலைவர் | ரணில் விக்கிரமசிங்க |
தொடக்கம் | 2001 |
கொள்கை | பழமைவாதம், அரசியல் இசுலாம், தமிழ்த் தேசியம் (சிறுமான்மைக் கட்சிகள்) |
அரசியல் நிலைப்பாடு | நடு-வலதுசாரி |
2004 ஏப்ரல் தேர்தலில் இக்கூட்டணி மொத்தம் 225 தொகுதிகளில் 82 ஐக் கைப்பற்றியது. 37.8% வாக்குகளைப் பெற்றது. 2010 ஏப்ரல் தேர்தலில் இக்கூட்டணி 29.34% வாக்குகளைப் பெற்று 60 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இத்தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரசு கட்சி கூட்டணியில் இருந்து ஆளும் ஐமசுகூயில் இணைந்து அரசில் பங்காளிக் கட்சியாகச் சேர்ந்தது.