முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, சிங்களம்: රනිල් වික්‍රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரும் ஆவார். இவர் 2015 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.[1]

ரணில் விக்கிரமசிங்க
நா.உ
R Wickremasinghe.jpg
இலங்கை பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 டிசம்பர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
முன்னவர் மகிந்த ராசபக்ச
பதவியில்
9 சனவரி 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
முன்னவர் டி.எம். ஜயரத்தின
பின்வந்தவர் மகிந்த ராசபக்ச
பதவியில்
9 டிசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்வந்தவர் மகிந்த ராசபக்ச
பதவியில்
7 மே 1993 – 18 ஆகத்து 1994
குடியரசுத் தலைவர் டி. பி. விஜயதுங்கா
முன்னவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பின்வந்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
மகிந்த ராசபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
டி. எம். ஜயரத்தின
முன்னவர் மகிந்த ராசபக்ச
பின்வந்தவர் நிமல் சிரிபால டி சில்வா
பதவியில்
28 அக்டோபர் 1994 – 10 அக்டோபர் 2001
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னவர் காமினி திசாநாயக்கா
பின்வந்தவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1994
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
பியகமை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
21 சூலை 1977 – 15 பெப்ரவரி 1989
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் தொகுதி அழிப்பு
கொள்கைத் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் இவரே
முன்னவர் பசில் ராஜபக்ச
சட்டம், ஒழுங்கு அமைச்சர்
பதவியில்
25 பெப்ரவரி 2018 – 8 மார்ச் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் இவரே
முன்னவர் சாகல இரத்திநாயக்கா
பின்வந்தவர் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார
தொழிற்துறை, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
1989 – மே 1993
குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா
பிரதமர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
கல்வி அமைச்சர்
பதவியில்
14 பெப்ரவரி 1980 – 1989
குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா
பிரதமர் ரணசிங்க பிரேமதாசா
முன்னவர் நிசங்கா விஜயரத்தின
பின்வந்தவர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார
இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சர்
பதவியில்
5 அக்டோபர் 1977 – 1980
குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா
பிரதமர் ரணசிங்க பிரேமதாசா
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1994
துணை சஜித் பிரேமதாச
கரு ஜயசூரிய
முன்னவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
தனிநபர் தகவல்
பிறப்பு ரணில் விக்கிரமசிங்க
24 மார்ச்சு 1949 (1949-03-24) (அகவை 70)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மைத்திரி விக்கிரமசிங்க
பெற்றோர் எசுமண்ட் விக்கிரமசிங்க
இருப்பிடம் 115 ஐந்தாம் ஒழுங்கை
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
கொழும்புப் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்
இணையம் அதிகாரபூர்வ இணையதளம்

விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், 2001 முதல் 2004 வரையிலும், 2015 முதல் 2018 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]

சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.[3] 2015 ஆகத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[4][5]

விக்கிரமசிங்கவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. 113 என்ற அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.[6][7] 2018 அக்டோபர் 26 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி, அவருக்குப் பதிலாக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவைப் பிரதமராக நியமித்தார். ராசபக்சவின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி விக்கிரமசிங்க இதனை ஏற்கவில்லை. இதனால் இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை சந்தித்தது.[8] 2018 டிசம்பர் 16 இல் இவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Ranil Wickremesinghe appointed Prime Minister". Trade Bridge Consultants. http://tradebridgeconsultants.com/news/elections/ranil-wickremesinghe-appointed-prime-minister/. பார்த்த நாள்: 21 ஆகத்து 2015. 
  2. "Ranil Wickremesinghe - Gentlemen Politician of 4 decades, alias mature leader of the people". United National Party. பார்த்த நாள் 21 August 2015.
  3. வீரகேசரி செய்தி
  4. Ramachandran, Sudha (13 ஆகத்து 2015). "Sri Lanka’s Elections: Rajapaksa Tries a Comeback". The Diplomat. http://thediplomat.com/2015/08/sri-lankas-elections-rajapaksa-tries-a-comeback/. பார்த்த நாள்: 21 ஆகத்து 2015. 
  5. "Prime Minister Wickremesinghe Calls For Buddhist Approach: Nikkei". AsiaMirror cloned Nikkei. 20 ஆகத்து 2015. http://www.asianmirror.lk/news/item/11041-prime-minister-wickremesinghe-calls-for-buddhist-approach-nikkei. பார்த்த நாள்: 21 ஆகத்து 2015. 
  6. Ramachandran, Sudha (13 August 2015). "Sri Lanka’s Elections: Rajapaksa Tries a Comeback". The Diplomat. http://thediplomat.com/2015/08/sri-lankas-elections-rajapaksa-tries-a-comeback/. பார்த்த நாள்: 21 August 2015. 
  7. "Prime Minister Wickremesinghe Calls For Buddhist Approach: Nikkei". AsiaMirror cloned Nikkei. 20 August 2015. http://www.asianmirror.lk/news/item/11041-prime-minister-wickremesinghe-calls-for-buddhist-approach-nikkei. பார்த்த நாள்: 21 August 2015. 
  8. "Mahinda Rajapaksa sworn in as Prime Minister". adaderana.lk. 26 October 2018. http://www.adaderana.lk/news/50985/mahinda-rajapaksa-sworn-in-as-prime-minister. பார்த்த நாள்: 26 October 2018. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரணில்_விக்கிரமசிங்க&oldid=2614303" இருந்து மீள்விக்கப்பட்டது