கொள்ளுப்பிட்டி
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
கொள்ளுப்பிட்டி (Kollpity) இலங்கையில் உள்ள கொழும்பின் நகர்ப்பகுதிகளில் ஒன்றாகும். கடைசி கண்டி அரசரைக் கவிழ்க்க முயன்று தோல்வியடைந்த ஒரு தலைவரை முன்னிட்டு இப்பகுதிக்கு இப்பெயர் அமைந்தது. பிரித்தானிய, டச்சுக் குடியேற்ற நாட்களில் இங்கு தென்னங்கள்ளில் இருந்து சாராயம் தயாரிக்கப்பட்டது.
கொள்ளுபிட்டி
කොල්ලුපිටිය Kollpity | |
---|---|
நகர்ப்புறம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
அஞ்சல் குறியீடு | 00300 [1] |
தற்காலத்தில் இங்கு பல வணிகச் சரகங்களும் உயர்தர பாணி அங்காடி வளாகங்களும் அமைந்துள்ளன. சில வெளிநாட்டுத் தூதரகங்களும் இங்கு உள்ளன. இங்குள்ள மகா நுகெ பூங்கா எனப்படும் தனியார் சாலை மிகவும் புகழ் பெற்றது.