சாராயம் (Arrack) தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கரும்புச்சாறு, தென்னை ஊறல் அல்லது பழச்சாறுகளைப் புளிக்க வைத்து வடிதிறுக்கப்படும் ஓர் மது பானமாகும். சாராயம் பொதுவாக பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் "அரக்" என்று வழங்கப்படும் நிறமற்ற பானத்திலிருந்து இது வேறானது.தென்னையிலிருந்துப் பெறப்படும் சாராயம் தானியத்திலிருந்தோ பழத்திலிருந்தோ வடிக்கப்படாமையால் இசுலாமியர்களின் மதுவிலக்கு விதிக்கு இது "விலக்காகக்" கருதப்படுகிறது.

இலங்கையின் சாராயக் குப்பி ஒன்று

இந்தியாவில் கரும்பாலைகளில் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் மொலாசஸ் எனும் வெல்லப்பாகுவிலிருந்து எரிசாராயம் எடுத்து, பின் அதில் தேவையான நீரைக் கலந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது.

தென்னங் கள் தொகு

தென்னை மரத்தின் பூக்கள் மலரும் முன்பே அவற்றிலிருந்து பால்போன்ற திரவம் திரட்டப்பட்டு ஊற வைக்கப்படுகிறது. இது மிதமான ஆல்ககோல் பானமாக "தென்னங் கள்" (toddy) என்றழைக்கப்படுகிறது. இதனை தேக்குப்பானைகளில் புளிக்க வைத்து வடித்திறக்க்போது கிடைக்கும் சாராயம் விஸ்கிக்கும் ரம்மிற்கும் இடைப்பட்ட உருசியுடன் உள்ளது.இதன் ஆல்ககோல் இருப்பு பொதுவாக 33% முதல் 50% வரை இருக்குமாறு (கொள்ளவில் 66 -100) வடித்தெடுக்கப்படுகிறது.

இலங்கையில் தொகு

இலங்கையில் சாராயம் மிகவும் பிரபலமான உள்ளூர் மது வகையாகும். பெரும்பாலான குறைந்தவிலை சாராய வகைகளில் சாராயமும் பிற தெளிந்த ஆல்ககோல்களும் கலக்கப்படுகின்றன. சில பரவலான விற்பனைப் பெயர்கள்:

  • வி.எஸ்.ஓ.ஏ (V.S.O.A.) ("Very Special Old Arrack")
  • ஓல்ட் ரிசர்வ் (Old Reserve)
  • எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் (Extra Special)
  • டபுள் டிஸ்டில்ட் (Double Distilled)
கூடுதலான தயாரிப்பு நிறுவனங்கள்
  • ராக்லாண்ட் (Rockland)
  • மென்டிஸ் (Mendis)
  • ஐடிஎல் (IDL)
  • டிசிஎஸ்எல் (DCSL)

இலங்கையின் சாராயம் ஐக்கிய இராச்சியத்தில் ஐரோப்பிய விற்பனைக்காக குப்பிகளில் அடைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Ceylon Arrack Bottled in UK பரணிடப்பட்டது 2010-03-27 at the வந்தவழி இயந்திரம் Retrieved 18 September 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாராயம்&oldid=3243709" இலிருந்து மீள்விக்கப்பட்டது