டி. ஆர். விஜயவர்தனா

தொன் ரிச்சார்டு விஜயவர்த்தனா (Don Richard Wijewardena, சிங்களம்: දොන් රිච්ඩ් විජෙවර්ධන, 23 பெப்ரவரி 1886 – 13 சூன் 1950) இலங்கை ஊடக பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தார். இவர் இலங்கை சுதந்திர போராட்ட தலைவரும் ஆவார். இவர் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். விஜயவர்த்தனாவின் இலங்கை சுதந்திர போராட்ட பங்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

டி. ஆர். விஜயவர்தனா
Don Richard Wijewardana
பிறப்புதொன் ரிச்சார்டு விஜயவர்தனா
(1886-02-23)23 பெப்ரவரி 1886
இலங்கை
இறப்பு13 சூன் 1950(1950-06-13) (அகவை 64)
தேசியம்இலங்கை
இனம்சிங்களவர்
படித்த கல்வி நிறுவனங்கள்முகத்துவாரம் புனித தோமையர் கல்லூரி,
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர்
அறியப்படுவதுஏரிக்கரைப் பத்திரிகைகள்
சமயம்தேரவாத பௌத்தம்
பெற்றோர்டொன் பிலிப்பு விஜயவர்தனா,
எலனா வீரசிங்க
வாழ்க்கைத்
துணை
அலீசு மீதெனியா
பிள்ளைகள்2 ஆண்கள், 3 பெண்கள்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா 23 ஆம் நாள் பிப்ரவரி திங்கள் 1886 ஆம் ஆண்டு மூன்றாவது மகனாக முகாந்திரம் டான் பிலிப் விஜயவர்த்தனா ஹெலினா வீரசிங்கா தம்பதிகளுக்கு பிறக்கிறார். இவர் பெற்றோர்களுக்கு மொத்தம் ஏழ ஆண் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆவர். இவர் தந்தை மேல் மாகாணம், இலங்கையில் உள்ள ஒரு மர வியாபாரி ஆவார். தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.இவரின் சகோதரர்கள் டான் பிலிப்சு அலெக்சாண்டர், டான் லீவிசு, டான் சார்லசு, டான் எட்மன்டு, டான் ஆல்பர்ட்டு மற்றும் டான் வாள்டர் ஆவர். மேலும் அவருடைய சகோதிரிகளில் ஒருவரான ஹாரியட் என்பவர் மருத்துவர் அர்தூர் செனவீரரத்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். மற்றோரு சகோதிரியான இகுனி வில்பர்ட்டு நீதிபதியான ஜெயவர்த்தனாவை திருமணம் செய்துகொண்டார். டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா தன் ஆரம்ப பள்ளி படிப்பை மேல் மாகாணம், இலங்கையில் உள்ள சேதவத்த பள்ளியில் படித்தார். பின்னர் தெகிவளை-கல்கிசையில் உள்ள புனித தாமசு கல்லூரியில் உயர்நிலைப் படிப்பை முடித்தார்.[1][2][3] மேற்படிப்புக்காக இவர் பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சுக்கு சென்றார். தனது ஆர்வத்தை அரசியல் மீது செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான லாலா லஜபதி ராய், கோபால கிருஷ்ண கோகலே தனித்தன்மையால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி படிப்பை முடித்து பார் அட் லா ஆனார்.

பணிகள்

தொகு

டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா 1912 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். தனது வழக்கறிஞர் பணியை இலங்கை மீயுயர் நீதிமன்றம் வழக்கறிஞராக சத்திய பிரமாணம் செய்துகொண்டார். தனது வழக்கறிஞர் பணியை புதுக்கடை (கொழும்பு)யில் இருந்து தொடங்கினார். ஆனால் அவரால் வழக்கறிஞர் பணியில் அதிக நாட்கள் தொடர முடியவில்லை. ஆதலால் தொழில் பக்கம் தனது கவணத்தை செலுத்தினார். 1917 ஆம் ஆண்டு முதலாம் உலக போரில் சிலோன் பாதுகாப்பு படையில் இணைந்து எஸ்.எல்.எல்.ஐயில் (சிலோன் அரசின் ஒரு படைப்பிரிவு) லெப்டினன்ட்டாக (ஜூனியர் கமிஷன் அதிகாரி) தன்னை முலுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.[4]

செய்தித்தாள் வெளியீட்டாளராக மற்றும் உரிமையாளராக

தொகு

டி. ஆர். விஜயவர்த்தனா தனது சகோதரர் டி. சி. விஜயவர்த்தனாவுடன் இணைந்து லேக் ஹவுஸ் எனும் செய்தித்தாளான சிங்கள நாளிதழை நிறுவி வெளியிட்டார். 1918 ஆம் ஆண்டு இது ஆங்கில நாளிதழாக வெளிவந்தது இது சிலோனின் விடுதலைக்காக முதன்மையாக செயல்பட்டது. இது அந்நாட்களில் தமிழ் மொழியில் வெளிவந்த செய்தித்தாளான தினகரன் என்ற நாளிதழை பின் தொடர்ந்தது. பின்னாளில் 1926 ஆம் ஆண்டு இவைகளை இணைத்து இலங்கை தொடர்பான செய்தித்தாள்கள் நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் 7 வெளியீடுகள் வந்தன. அவைகள் அனைத்தும் விஜயவர்த்தனாவின் தலைமையில் வெளிவந்தன.

  • லேக் ஹவுஸ்-சிங்களம்
  • தினமினா-சிங்களம்
  • சிலுமினா-சிங்களம்
  • தினகரன்-தமிழ்
  • ஞாயிரு-தினகரன்-தமிழ்
  • தி அப்சர்வர்-ஆங்கிலம்
  • சன்டே அப்சர்வர்-ஆங்கிலம்

தேசிய இயக்கம்

தொகு
 
இலங்கை மேலாட்சியின் கொடி

1913 ஆம் ஆண்டு இவர் சிலோன் தேசிய சங்கத்திற்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜயவர்த்தனா தன் சங்க தலைவர் ஜேம்ஸ் பாரிஸ் மூலம் தம் முதல் அரசியல் நுழைவை மேற்கொண்டார். இவர் அரசியலமைப்பு மறு உருவாக்கம் மற்றும் சுயாட்சியை வழியுருத்தினார்.[5] இ.டபிள்யூ.பெரேராவுடன் இணைந்து இவர் கண்டி இராச்சியம் கடைசி மன்னர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கேவின் கொடியை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டெடுத்தார். இது 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்டெடுக்கப்பட்ட கோடியானது இலங்கையின் விடுதலை இயக்கத்தில் ஓரு கவனிக்கத்தக்க நிகழ்வாகும். இது பின்னாளில் 1948 ஆம் ஆண்டு இலங்கையின் இலங்கை மேலாட்சி கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "D. R. Wijewardene – trail blazer in local newspaper industry". Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
  2. "121st birth anniversary of D. R. Wijewardene falls today: Lake House and D. R. Wijewardene: The informative and the pragmatist". Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
  3. "Old Thomians who rallied round the boss". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
  4. D.R. rises to the occasion
  5. Working towards reform, The Sunday Times, Retrieved 23 April 2015
  6. Tribute to the men who gave us the National Flag
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._விஜயவர்தனா&oldid=4120167" இலிருந்து மீள்விக்கப்பட்டது