டளஸ் அளகப்பெரும

டளஸ் அளகப்பெரும (Dullas Alahapperuma; பிறப்பு: 14 மே 1959) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

டளஸ் அளகப்பெருமா
Dullas Alahapperuma
ඩලස් අලහප්පෙරුම
வெகுசன ஊடகத்துறை அமைச்சர்
பதவியில்
16 ஆகத்து 2021 – 3 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்கெஹெலிய ரம்புக்வெல
பின்னவர்நாளக்க கொடகேவா
எரிசக்தி அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 16 ஆகத்து 2021
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்மகிந்த அமரவீர
பின்னவர்காமினி லொகுகே
விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்ஹரின் பெர்னாண்டோ
பின்னவர்நாமல் ராசபக்ச
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
பதவியில்
1994–2001
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2005–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
டளசு தகம் குமார அளகப்பெருமா

14 மே 1959 (1959-05-14) (அகவை 64)
இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி - சிறீலங்கா மக்கள் முன்னனி
துணைவர்பிரதீபா தர்மதாசா
பிள்ளைகள்மகிமா இந்துவர,
கௌசிக்கா நாலந்த
முன்னாள் கல்லூரிபுனித செர்வேசியசுக் கல்லூரி,
ஆனந்தா கல்லூரி
வேலைஅரசியல்வாதி
தொழில்பத்திரிகையாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அளகப்பெருமா மாத்தறையில் திக்குவெல்லை என்ற ஊரில் கரோலிசு அளகப்பெருமா, அசுலின் ஆகியோருக்குப் பிறந்தவர். பெற்றோர் இருவரும் பாடசாலைத் தலைமை ஆசிரியர்கள் ஆவர்.[1] ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற டளசு, அயோவா பல்கலைக்கழகத்தில் ஒன்றரை ஆண்டுகள் அரசறிவியல் பயின்றார், ஆனால் பட்டம் எதுவும் பெறவில்லை.[2]

அரசியலில் தொகு

1994 ஆம் ஆண்டில் மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை (76,678) பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2000 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சமுர்த்தி, கிராம மேம்பாடு, நாடாளுமன்ற விவகாரங்கள், மலையக அபிவிருத்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2001 தேர்தலில் இவர் வெற்றி பெறவில்லை.

2005 இல் லக்சுமன் கதிர்காமர் கொல்லப்பட்டதை அடுத்து, திசம்பர் 19 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் மூலம் டளசு நாடாளுமன்றம் சென்றார். 2007 இல் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010 தேர்தலை அடுத்து இவர் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். இளைஞர் விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அப்பதவியை வகிக்ககவும், அரசுத்தலைவருக்கு அதைக அதிகாரங்களை வழங்கவும் கொண்டுவரப்பட்ட 18-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்தார். 2015 இல் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் 19-ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்தார்.

2015 தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு 105,406 விருப்பு வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[3] 2020 தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளராக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 103,534 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார். இதன் போது அரசுத்தலைவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கக்கூடிய 20-ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

2022 சூலையில் அரசுத்தலைவர் தேர்தலில் வேட்பாளராகத் தன்னை அறிவித்தார்.[4][5] இவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

குடும்பம் தொகு

டளசு அளகப்பெரும காலியைச் சேர்ந்த பிரபல பாடகி பிரதீபா தர்மதாசாவைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 WELABADA, Lakmal (5 October 2008). "I appreciate him as a politician but prefer the journalist in him". Sunday Observer (Sri Lanka). Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  2. "BUSINESS TODAY -Dullas Alahapperuma Outlines the track record". www.businesstoday.lk. Archived from the original on 2020-07-23. பார்க்கப்பட்ட நாள் 2020-07-23.
  3. "Dullas resigns from Matara District SLFP leader post". Ada Derana News. 19 August 2016.
  4. "Dullas ready to contest for vacant post of President". Sri Lanka News - Newsfirst. 15 July 2022.
  5. "Here Are The Main Contenders to Be Sri Lanka's Next President". Bloomberg News. 15 July 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டளஸ்_அளகப்பெரும&oldid=3584857" இலிருந்து மீள்விக்கப்பட்டது