மக்கள் கூட்டணி (இலங்கை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மக்கள் கூட்டணி (People's Alliance, PA) என்பது இலங்கையின் ஓர் அரசியல்கட்சிக் கூட்டணி ஆகும். இது 1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
மக்கள் கூட்டணி People's Alliance | |
---|---|
தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
செயலாளர் | தி. மு. ஜயரத்ன |
தொடக்கம் | 1994 |
தலைமையகம் | 301, ரி. பி. ஜாயா மாவத்தை, கொழும்பு |
தேசியக் கூட்டணி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
தேர்தல் சின்னம் | |
கதிரை | |
இலங்கை அரசியல் |
பின்வருவன இக்கூட்டணியில் உறுப்புக் கட்சிகளாக உள்ளன:
- இலங்கை சுதந்திரக் கட்சி
- லங்கா சமசமாஜக் கட்சி
- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
- இலங்கை மகாஜனக் கட்சி
- பகுஜன நிதகாசு பெரமுனை
- தேச விமுக்தி ஜனதா கட்சி
- சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
1994 ஆம் ஆண்டிலும், 2000 ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அத்துடன் 1994, 1999 அரசுத்தலைவர் தேர்தல்களிலும் இக்கூட்டணி வெற்றி பெற்றது. ஆனாலும், 2001 பொதுத்தேர்தலில் இக்கூட்டணி தோல்வியடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அமைக்கப்பட்டதும், மக்கள் கூட்டணி தேர்தல்களில் பங்குபற்றவில்லை.