இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2000

2000 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 11வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2000, அக்டோபர் 8 இல் இடம்பெற்றது[1]. அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 10வது நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.

இலங்கையின் 11வது நாடாளுமன்றத் தேர்தல்

← 1994 10 அக்டோபர் 2000 2001 →

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 இருக்கைகளுக்கும்
அரசு அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவை
வாக்களித்தோர்75.63%
  First party Second party Third party
 
தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்க சோமவன்ச அமரசிங்க
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் விடுதலை முன்னணி
கூட்டணி மக்கள் கூட்டணி - -
தலைவரான
ஆண்டு
1994 1994 1990
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
எதுவுமில்லை கொழும்பு தேர்தல் மாவட்டம் எதுவுமில்லை
முந்தைய
தேர்தல்
105 94 1
வென்ற
தொகுதிகள்
107 89 10
மாற்றம் 2 5 9
மொத்த வாக்குகள் 3,900,901 3,477,770 518,774
விழுக்காடு 45.11% 40.22% 6.00%

வெற்றியாளர்கள். மமு நீலத்திலும் ஐதேக பச்சையிலும் காட்டப்பட்டுள்ளது.

முந்தைய இலங்கை பிரதமர்

இரத்தினசிறி விக்கிரமநாயக்க
மக்கள் கூட்டணி

இலங்கை பிரதமர்-தெரிவு

இரத்தினசிறி விக்கிரமநாயக்க
மக்கள் கூட்டணி

ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான மக்கள் கூட்டணி அரசு மீது இம்முறை இரு முனைகளில் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன: ஈழப்போரில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் பல முனைகளில் தோல்வி, பொருளாதாரத்தில் மந்தநிலை ஆகியவையே அவையாகும்.

பல வன்முறைகளின் மத்தியில் தேர்தல்கள் இடம்பெற்றன. தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 70 பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தேதல் நாலன்று கொல்லப்பட்டனர்.[2] எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஆகிய கட்சிகள் தேர்தல் முறைகேடுகளுக்கு ஆளும் கட்சியைக் குற்றம் சாட்டின. 1983 இஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே தேர்தல்களில் வாகக்ளித்தனர்.

முடிவுகள்

தொகு

சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆளும் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2001 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம்
  மக்கள் கூட்டணி 3,900,901 45.11 94 13 107
  ஐக்கிய தேசியக் கட்சி 3,477,770 40.22 77 12 89
  மக்கள் விடுதலை முன்னணி 518,774 6.00 8 2 10
  தமிழர் விடுதலைக் கூட்டணி 106,033 1.23 5 0 5
  முஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டணி 197,983 2.29 3 1 4
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 50,890 0.59 4 0 4
  தமிழீழ விடுதலை இயக்கம் 26,112 0.30 3 0 3
  சிங்கள மரபு 127,863 1.48 0 1 1
சுயேட்சை 67,288 0.78 1 0 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 27,323 0.32 1 0 1
  புதிய இடது முன்னணி 32,275 0.37 0 0 0
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்1 23,013 0.27 0 0 0
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி 20,848 0.24 0 0 0
ஏனையோர் 70,595 0.82 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 8,647,668 100.00 196 29 225
நிராகரிக்கப்பட்டவை 481,155
மொத்த வாக்குகள் 9,128,823
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 12,071,062
வாக்குவீதம் 75.63%
Source: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2010-08-26 at Archive.today
1. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குருனாகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆளும் மக்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது, ஏனைய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டது.
2. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆளும் மக்கள் கூட்டணியிலும், ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டமைப்பிலும் போட்டியிட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "6th Parliament Dissolved". News and Events. இலங்கை நாடாளுமன்றம். 10 February 2010. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "id=392758". Archived from the original on 2006-05-19. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15. {{cite web}}: Missing pipe in: |title= (help)