தமிழீழ விடுதலை இயக்கம்
தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization, டெலோ, TELO) என்பது இலங்கைத் தமிழ் அமைப்பும், அரசியல் கட்சியும் ஆகும். இது இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுதந்திரத் தமிழீழம் அமைக்கும் நோக்கோடு சிறீ சபாரத்தினம், நடராஜா தங்கதுரை, குட்டிமணி ஆகியோரால் 1986 இல் நிறுவப்பட்டது.[1] தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 1983 கறுப்பு யூலைக் கலவரங்களின் போது வெலிக்கடைச் சிறையில் சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள். இவ்வமைப்பு 1986 வரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, இவ்வமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம் உட்படப் பெருமளவு போராளிகள் புலிகளினால் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியிருந்த டெலோ தலைவர்கள் அதே பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, நாடாளுமன்ற மற்றும் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.[1]
தமிழீழ விடுதலை இயக்கம் | |
---|---|
Tamil Eelam Liberation Organization දෙමළ ඊලාම් විමුක්ති සංවිධානය | |
தலைவர் | செல்வம் அடைக்கலநாதன் |
நிறுவனர் | சுந்தரம்பிள்ளை சபாரத்தினம், நடராஜா தங்கதுரை, செல்வராசா யோகேந்திரன் |
செயலாளர் | என். இந்திரகுமார் |
தொடக்கம் | 1969 (அமைப்பு) 1987 (அரசியல் கட்சி) |
தலைமையகம் | 34 அம்மன்கோவில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா |
கொள்கை | இலங்கைத் தமிழ்த் தேசியம் |
தேசியக் கூட்டணி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
நாடாளுமன்றம் | 3 / 225
|
தேர்தல் சின்னம் | |
கலங்கரை விளக்கம் | |
இணையதளம் | |
telo.org | |
இலங்கை அரசியல் |
டெலோ கட்சி தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்புக் கட்சியாகத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 `We are on the correct path', Frontline, Oct. 09-22, 2004
- Hellmann-Rajanayagam, D. (1994) "The Groups and the rise of Militant Secessions". in Manogaram, C. and Pfaffenberger, B. (editors). The Sri Lankan Tamils. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-8845-7
- Narayan Swamy, M. R. (2002) Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers; 3rd ed. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-220-0631-0