இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001

2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 12வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2001, டிசம்பர் 6 இல் இடம்பெற்றது. 11வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று ஓராண்டுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.

இலங்கையின் 12வது நாடாளுமன்றத் தேர்தல்

← 2000 5 டிசம்பர் 2001 2004 →

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 இருக்கைகளுக்கும்
அரசு அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவை
வாக்களித்தோர்76.03%
  First party Second party
  Ranil At UNP Office.jpg Chandrika Kumaratunga.jpg
தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
கட்சி ஐக்கிய தேசிய முன்னணி மக்கள் கூட்டணி
தலைவரின் தொகுதி கொழும்பு மாவட்டம் எதுவுமில்லை
வென்ற தொகுதிகள் 109 77
மொத்த வாக்குகள் 4,086,026 3,330,815
விழுக்காடு 45.62% 37.19%

Sri Lankan Parliamentary Election 2001.png
மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். ஐதேமு பச்சை நிறத்திலும், மமு நீலத்திலும் காட்டப்பட்டுள்ளன.

முந்தைய இலங்கை பிரதமர்

இரத்தினசிறி விக்கிரமநாயக்க
மக்கள் கூட்டணி

இலங்கை பிரதமர்-தெரிவு

ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசிய முன்னணி

பின்னணிதொகு

மக்கள் கூட்டணி அரசில் இருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது. அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்கள் விடுதலை முன்னணியைக் கூட்டணியில் சேர்க்க முயன்றார். இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர். அர்சுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசைக் கலைத்து புதிய தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.

தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதியப்பட்டன.[1]. தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர்.[2]

கட்சிகள்தொகு

முடிவுகள்தொகு

அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆளும் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

இலங்கையின் அரசுத்தலைவரும், பிரதமரும் வெவ்வேறு கட்சியைச் சார்ந்திருந்ததால் அரசு பல முறை ஆட்டம் கண்டது. இறுதியில் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தை 2004 ஆம் ஆண்டில் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம்
  ஐக்கிய தேசிய முன்னணி1 4,086,026 45.62 96 13 109
  மக்கள் கூட்டணி 3,330,815 37.19 66 11 77
  மக்கள் விடுதலை முன்னணி 815,353 9.10 13 3 16
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு3 348,164 3.89 14 1 15
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு2 105,346 1.18 4 1 5
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 72,783 0.81 2 0 2
  சனநாயக பக்கள் விடுதலை முன்னணி 16,669 0.19 1 0 1
  சிங்கள மரபு 50,665 0.57 0 0 0
  புதிய இடது முன்னணி 45,901 0.51 0 0 0
சுயேட்சைக் குழுக்கள் 41,752 0.47 0 0 0
ஏனையோர் 42,395 0.47 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 8,955,869 100.00 196 29 225
நிராகரிக்கப்பட்டவை 493,944
மொத்த வாக்குகள் 9,449,813
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 12,428,762
வாக்கு வீதம் 76.03%
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்
1. ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
2. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐக்கிய தேசிய முன்னணியிலும் போட்டியிட்டது.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரிலும், சின்னத்திலும் போட்டியிட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "id=886251". மூல முகவரியிலிருந்து 2006-05-19 அன்று பரணிடப்பட்டது.
  2. "id=898423". மூல முகவரியிலிருந்து 2006-05-19 அன்று பரணிடப்பட்டது.