பிரதீபா தர்மதாசா

இலங்கையைச் சேர்ந்த பாடகி, நடிகை

பொதுபிட்டிய கங்கனமகே பிரதீபா நிர்மலி ஹேமமாலி தர்மதாசா (Pothupitiya Kankanamge Pradeepa Nirmali Hemamali Dharmadasa), (பிறப்பு 26 சனவரி 1964), பிரதீபா தர்மதாசா என பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இலங்கை இசைக்கலைஞரும், பின்னணி பாடகியும், இலங்கை நாடக மற்றும் தொலைக்காட்சியில் தோன்றிய முன்னாள் மேடை நாடக நடிகையுமாவார்.[1]

பிரதீபா தர்மதாசா
ප්‍රදීපා ධර්මදාස
பிறப்புபொதுபிட்டிய கங்கனமகே பிரதீபா நிர்மலி ஹேமமாலி தர்மதாசா
26 சனவரி 1964 (1964-01-26) (அகவை 60)
மொறட்டுவை, இலங்கை
கல்விவேல்ஸ் இளவரசி கல்லூரி
சுஜாதா வித்யாலயா
படித்த கல்வி நிறுவனங்கள்களனி பல்கலைக்கழகம்
பத்கண்டே பல்கலைக்கழகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
கிர்க்வுட் கல்வி நிறுவனம்]]
பணிபாடுதல், பின்னணி பாடுதல், நடிகர்
வாழ்க்கைத்
துணை
டளஸ் அளகப்பெரும (திருமணம் 1994)
பிள்ளைகள்2
விருதுகள்சிறந்த நடிகை
சிறந்தப் பின்னணி பாடகி
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1981–தற்போது வரை
வலைத்தளம்
https://pradeepadharmadasa.com

சொந்த வாழ்க்கை தொகு

இவர் 1964 சனவரி 26 அன்று மொறட்டுவையின் ரவதவத்தையில் நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்தார். இவருடைய தந்தை பொதுப்பிட்டி கன்கனமகே தர்மதாசா விவசாயம் மற்றும் கோவி ஜன சேவா துறையில் வேலை செய்தார். இவரது தாயார் மேதா கமகே ஹேமா தர்மதாசா ஒரு இல்லத்தரசி. இவருக்கு ஒரு மூத்த சகோதரியும், இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவருக்கு அடுத்த நெருங்கிய சகோதரர் கடலில் மூழ்கி இறந்தார். இவர் மொறட்டுவாவின் இளவரசி கல்லூரியில் படித்தார். அங்கு இவர் தனது வழிகாட்டியான சோமலதா சுபசிங்கேவைச் சந்தித்தார். பின்னர் இவர் உயர்கல்விக்காக நுகேகொட சுஜாதா வித்யாலயாவில் பயின்றார். இவர் வஜிரா-சித்ரசேனா அகாதமியில் நடனம் பயின்றார். பின்னர் நுகேகொட, 'கலா பூமி'யில் இசையினைக் கற்றார். பின்னர், சுபாசிங்கேவின் ஸ்ரீலங்கா யூத் தியேட்டர் பவுண்டேஷனில் ஒரு நாடகப் படிப்பைப் படித்தார்.[2]

இவர் களனி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் பத்கண்டே இசை நிறுவனத்தில் சேர்ந்து உதவித் தொகைப் பெற்று இசையினைக் கற்றார். பின்னர், இலங்கை திரும்பிய பிறகு, ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் வெகுஜன தகவல்தொடர்பு சான்றிதழ் படிப்பையும், அமெரிக்காவின் கிர்க்வுட் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தில் சான்றிதழ் படிப்பையும் முடித்தார். [3]

பிரதீபா, இலங்கையின் அமைச்சர் டளஸ் அளகப்பெரும என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் - மகிமா இந்துவாரா (1995 இல் பிறந்தார்) மற்றும் கௌசிகா நாளந்தா (1996 இல் பிறந்தார்). [3] மகிமா ராயல் கல்லூரியிலும் கௌசிகா ஆனந்த கல்லூரியிலும் கல்வியைத் தொடங்கினார்கள். பின்னர் இவர்கள் இருவரும் சர்வதேச லைசியம் கல்லூரிக்குச் சென்றனர். [2]

தொழில் தொகு

1981 ஆம் ஆண்டில், சோமலதா சுபாசிங்க தயாரித்த "சந்தா கிண்டூரி" என்ற நாடகத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். [3] 1983 இல், சுபசிங்க லாமா ஹா யோவுன் ரங்கா பீடயா என்ற நாடகப் பள்ளியைத் தொடங்கியவுடன் இவரும். அதனுடன் சேர்ந்தார். 1984 இல் சுபசிங்க முது புத்து நாடகத்தின் புதிய தயாரிப்பை உருவாக்கினார். அதில் பிரதீபா "ஹின்னிஹாமி" என்ற வேடத்தில் நடித்தார். இந்த காலகட்டத்தில், அதுலா பீரிஸின் சுபா சாரங்கதா மற்றும் சலாமன் பொன்சேகாவின் சக்விதி நிகமானா போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தார். [4]

பிரதீபா 1994 ஆம் ஆண்டு கிறிஸ்டி ஷெல்டனின் அரகலயா திரைப்படத்தில் பின்னணி பாடலைப் பாடினார். அப்போதிருந்து, இவர் மரியோ ஜெயதுங்காவின் நிதி யஹான கலாபே, ஹந்தனா கிங்கினி, மிரிவாடி சாகலக், சமன் நீலாவத்துராவின் சாவித்ரிகே ராத்ரியா, கிறிஸ்டி ஷெல்டனின் தஹனம் கஹா மற்றும் பென்னட் ரத்நாயக்கவின் இரா ஹந்தா யாதா உள்ளிட்ட பல படங்களுக்கு குரல் கொடுத்தார். 1997 ஆம் ஆண்டில், சாவித்ரியகே ராத்திரியா என்பதற்காக சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான சரசவியா மற்றும் இலங்கை சனாதிபதி விருதுகளை வென்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "We love to leave our home full". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  2. 2.0 2.1 "'I appreciate him as a politician but prefer the journalist in him'". Sunday Observer. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  3. 3.0 3.1 3.2 3.3 "All about Pradeepa Dharmadasa". Pradeepa Dharmadasa official website. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  4. "Duwillen Saduna Liye". Saaravita. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீபா_தர்மதாசா&oldid=3589987" இலிருந்து மீள்விக்கப்பட்டது