இலங்கை சனாதிபதி

இலங்கை சனாதிபதி (President of Sri Lanka; சிங்களம்: ශ්‍රී ලංකා ජනාධිපති) என்பவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாட்டுத் தலைவரும், சட்டப்படியான அரசுத் தலைவரும், தலைமை நிர்வாகியும் ஆவார். சனாதிபதி மத்திய அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியும், இலங்கை ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார்.

இலங்கை சனாதிபதி
ශ්‍රී ලංකා ජනාධිපති
President of Sri Lanka
இலங்கையின் சின்னம்
தற்போது
அனுர குமார திசாநாயக்க

23 செப்டெம்பர் 2024 முதல்
உறுப்பினர்அமைச்சரவை, தேசிய பாதுகாப்புப் பேரவை
வாழுமிடம்சனாதிபதி மாளிகை
நியமிப்பவர்நேரடித் தேர்தல்
பதவிக் காலம்5 ஆண்டுகள், ஒருமுறை மீளப் போட்டியிடலாம்
அரசமைப்புக் கருவிஇலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்
முதலாவதாக பதவியேற்றவர்வில்லியம் கோப்பல்லாவ
1972 அரசியலமைப்பு
உருவாக்கம்22 மே 1972; 52 ஆண்டுகள் முன்னர் (1972-05-22)
துணை இலங்கை சனாதிபதிஇலங்கை பிரதமர்
ஊதியம்ரூ 1,170,000 ஆண்டுக்கு (2016) (≈ $ 7,640)[1]
இணையதளம்president.gov.lk
Presidential Secretariat

இந்த அலுவலகம் 1972 இல் இலங்கை குடியரசாகிய போது சம்பிரதாயமான குடியரசுத் தலைவராக உருவாக்கப்பட்டது. 1972 வரை, இலங்கை இரண்டாம் எலிசபெத் மகாராணியை நாட்டுத் தலைவராகக் கொண்ட பொதுநலவாய அமைப்பின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் இருந்தது. 1978 இல் குடியரசுத் தலைவர் பதவி ஒரு நிர்வாகப் பதவியாக மாறியது, அதன் பின்னர் நாட்டின் மிக மேலாதிக்க அரசியல் அலுவலகமாக இருந்து வருகிறது.

அனுர குமார திசாநாயக்க 2024 செப்டம்பர் 23 முதல் 10-ஆவது (9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட) அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார்.[2][3][4]

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை

தொகு

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.

சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.

அதிகாரங்களும் விதிமுறைகளும்

தொகு

சனாதிபதிகளின் பட்டியல்

தொகு
கட்சிகள்

      ஐக்கிய தேசியக் கட்சி       இலங்கை சுதந்திரக் கட்சி       புதிய சனநாயக முன்னணி       இலங்கை பொதுசன முன்னணி       சுயேச்சை

இல. படிமம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
மாகாணம்
காலம் அரசியல் கட்சி அரசு
1 வில்லியம் கோப்பல்லாவ
විලියම් ගොපල්ලව
William Gopallawa
(1896–1981)
மத்திய
22 மே
1972
4 பெப்ரவரி
1978
சுயேச்சை 2-வது சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசு 10-வது
5 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்
கடைசி மகாதேசாதிபதி, 1972 இல் இலங்கை குடியரசான பின்னர் முதலாவது நிறைவேற்றதிகாரமற்ற குடியரசுத் தலைவர்.
2   ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
ජුනියස් රිචඩ් ජයවර්ධන
Junius Richard Jayawardana
(1906–1996)
மேற்கு
4 பெப்ரவரி
1978
2 சனவரி
1989
ஐக்கிய தேசியக் கட்சி செயவர்தன அரசு 11-வது
12-வது
1982
10 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 29 நாட்கள்
1978 இல் நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் பதவி அறிமுகம்.[5]
3   சிறீ லங்காபிமான்ய
ரணசிங்க பிரேமதாசா
රණසිංහ ප්‍රේමදාස
Ranasinghe Premadasa
(1924–1993)
மேற்கு
2 சனவரி
1989
1 மே
1993†
ஐக்கிய தேசியக் கட்சி பிரேமதாச அரசு 13-வது
1988
4 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்
மே நாள் நிகழ்வில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
4 சிறீ லங்காபிமான்ய
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
ඩිංගිරි බණ්ඩා විජේතුංග
Dingiri Banda Wijetunga
(1916–2008)
மத்தி
1 மே
1993
12 நவம்பர்
1994
ஐக்கிய தேசியக் கட்சி விஜேதுங்க அரசு 13-வது
1993 14-வது
1 ஆண்டு, 6 மாதங்கள் மற்றும் 10 நாட்கள்
பிரேமதாச கொல்லப்பட்ட போது பிரதமராக இருந்தவர். பதில் சனாதிபதியாக நியமிக்கப்பட்டு 1993 மே 7 இல் நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.
5   சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
චන්ද්‍රිකා කුමාරතුංග
Chandrika Bandaranaike Kumaratunga
(1945–)
மேல்
12 நவம்பர்
1994
19 நவம்பர்
2005
இலங்கை சுதந்திரக் கட்சி குமாரதுங்க அரசு 14-வது
15-வது
1994, 1999 16-வது
11 ஆண்டுகள் மற்றும் 7 நாட்கள் 17-வது
முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத சனாதிபதி. தனது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவை பிரதமராக நியமித்தார்.

6

  மகிந்த ராசபக்ச
මහින්ද රාජපක්ෂ
Mahinda Rajapaksa
(1945–)
தெற்கு
19 நவம்பர்
2005
9 சனவரி
2015
இலங்கை சுதந்திரக் கட்சி மகிந்த அரசு 17-வது
18-வது
2005, 2010
9 ஆண்டுகள், 1 மாதம் மற்றும் 21 நாட்கள்
25-ஆண்டு கால ஈழப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. போர்க் குற்றங்களுக்கு உள்ளானார்.
7   மைத்திரிபால சிறிசேன
මෛත්‍රීපාල සිරිසේන
Maithripala Sirisena
(1951–)
வட-மத்தி
9 சனவரி
2015
18 நவம்பர்
2019
இலங்கை சுதந்திரக் கட்சி[N 1] சிறிசேன அரசு
(ஐதேக-வுடன் கூட்டணி)
18-வது
2015 19-வது
4 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 9 நாட்கள்
மூன்றாவது முறை போட்டியிட்ட மகிந்த ராசபக்சவைத் தோற்கடித்தார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாவது திருத்தம்.
8   கோட்டாபய ராஜபக்ச
ගෝඨාභය රාජපක්ෂ
Gotabaya Rajapaksa
(1949–)
தெற்கு[6]
18 நவம்பர்
2019
14 சூலை
2022
இலங்கை பொதுசன முன்னணி கோட்டாபய அரசு 19-வது
2019 2-வது கோட்டாய அரசு 20-வது
மூன்றாவது கோட்டாபய அரசு
2 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 26 நாட்கள் நான்காவது கோட்டாபய அரசு
மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் இருபதாவது திருத்தம் மூலம் அதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டார். தவறான பொருளாதாரக் கொள்கை பெரும் நெருக்கடியாக உருவெடுத்தது, அரசுக்கெதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மகிந்த ராசபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். கோட்டாபய 2022 சூலை 13 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.[7][8][9][10]
9   ரணில் விக்கிரமசிங்க
(பிறப்பு 1949)
மேல்
14 சூலை
2022
20 சூலை
2022
பாதுகாப்பு அமைச்சர்
தொழில்நுட்ப அமைச்சர்
நிதி அமைச்சர்
பெண்கள், சிறுவர் விவகார, சமூக மேப்பாட்டு அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சி விக்கிரமசிங்க அரசு 20-ஆவது [11]
20 சூலை
2022
23 செப்டம்பர்
2024
2022[N 2]
2 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 6 நாட்கள்
2022 அரசியல் கிளர்ச்சியின் பின்னர் கோட்டாபய இராசபக்ச பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து பதில் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[12] 2022 சூலை 20 இல் அரசியலமைப்பின் 40-ஆவது பகுதியின் கீழ் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10 அனுர குமார திசாநாயக்க
(பிறப்பு 1968)
மேல்
23 செப்டம்பர்
2024
நடப்பு தேசிய மக்கள் சக்தி திசாநாயக்க 20-ஆவது
2024

கடைசித் தேர்தல்

தொகு
வேட்பாளர்கட்சிமுதல் சுற்றுஇரண்டாம் சுற்று
வாக்குகள்%வாக்குகள்%
அனுர குமார திசாநாயக்கதேசிய மக்கள் சக்தி56,34,91542.3157,40,17955.89
சஜித் பிரேமதாசஐக்கிய மக்கள் சக்தி43,63,03532.7645,30,90244.11
ரணில் விக்கிரமசிங்கசுயேச்சை22,99,76717.27
நாமல் ராசபக்சஇலங்கை பொதுசன முன்னணி3,42,7812.57
பா. அரியநேத்திரன்சுயேச்சை2,26,3431.70
ஏனையோர் (33 வேட்பாளர்கள்)4,52,7753.40
மொத்தம்1,33,19,616100.001,02,71,081100.00
மூலம்: இலங்கைத் தேர்தல் திணைக்களம்[13] (தேர்தல் திணைக்களம்)

குறிப்புகள்

தொகு
  1. புதிய சனநாயக முன்னணி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. நாடாளுமன்றம் மூலம் மறைமுகத் தேர்தல்.

மேற்கோள்கள்

தொகு
  1. Thomas, Kris (21 November 2016). "Of Ministers' Salaries And Parliamentary Perks". Roar.lk. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
  2. "Anura Kumara to be sworn in as President today". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
  3. "Anura Kumara Dissanayake elected President of Sri Lanka". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  4. AFP (2024-09-22). "Anura Kumara Dissanayake elected Sri Lanka President" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/marxist-leader-anura-kumara-dissanayake-elected-sri-lanka-president/article68671042.ece. 
  5. "Former Sri Lanka president dies, leaves mixed legacy". CNN. 1 November 1996. பார்க்கப்பட்ட நாள் 4 October 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Presidential candidates cast their votes". நியூஸ் பெர்ஸ்ட். பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  7. Pathi, Krutika (13 July 2022). "Thousands protest against Sri Lanka’s new acting president". அசோசியேட்டட் பிரெசு (கொழும்பு). https://apnews.com/article/sri-lanka-ranil-wickremesinghe-government-and-politics-c621aa755da7496c4e5cb6cec12902d1. "Sri Lankan President Gotabaya Rajapaksa fled on a military jet on Wednesday after angry protesters seized his home and office, and appointed Prime Minister Ranil Wickremesinghe as acting president while he is overseas." 
  8. Marian, Teena (14 July 2022). "Speaker yet to receive GRs resignation". நியூஸ் பெர்ஸ்ட். https://www.newsfirst.lk/2022/07/14/speaker-yet-to-receive-grs-resignation/. 
  9. Jayasinghe, Uditha (14 July 2022). "Sri Lanka awaits president's resignation after flight". ராய்ட்டர்ஸ் (கொழும்பு). https://www.reuters.com/world/asia-pacific/sri-lanka-awaits-presidents-resignation-after-flight-2022-07-14/. 
  10. "Sri Lanka Crisis LIVE Updates: Gotabaya Rajapaksa steps down as president, emails resignation letter to parliament speaker". 14 July 2022. https://timesofindia.indiatimes.com/world/south-asia/sri-lanka-economic-crisis-live-updates-july-13/liveblog/92840115.cms. 
  11. Gunasekara, Skandha; Schmall, Emily; Mashal, Mujib (14 July 2022). "Sri Lanka's President Resigns After Months of Protest". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
  12. Sri Lanka PM Wickremesinghe sworn in as acting president - govt official
  13. "Presidential Election Results - 2024". Election Commission of Sri Lanka. 22 September 2024. Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_சனாதிபதி&oldid=4125502" இலிருந்து மீள்விக்கப்பட்டது