இலங்கை அமைச்சரவை

இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் பேரவையாகும்.[1] அமைச்சரவைக்கான உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார். அதிகாரபூர்வமாக அரசுத்தலைவரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார். அரசின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு வாரத்தில் பல முறைகள் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவைக்கு வெளியே பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அமைச்சரவையில் (2019 அக்டோபர்) அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 10 மூத்த அமைச்சர்கள், 54 அமைச்சர்கள், மற்றும் 2 திட்ட அமைச்சர்களும், 39 பிரதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இது அரசு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.[2][3] 2010 பெப்ரவரியில் கலைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை என்ற பெயர் கின்னசுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.[4] புதிய அமைச்சரவை 2010 ஏப்ரல் 23 இல் அமைக்கப்பட்டது.

பின்னணிதொகு

இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை பிரித்தானிய இலங்கையில் பிரித்தானிய குடியேற்ற நிருவாகத்தினால் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இலங்கை சட்டவாக்கப் பேரவையுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட சட்டப் பேரவையாக 1833 மார்ச்சு 13 இல் நிறுவப்பட்டது.

நிறைவேற்றுப் பேரவை அமைக்கப்பட்ட போது ஆளுனர் அதன் தலைவராகவும், ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஐவர் அதன் உறுப்பினர்களாகவும் செயல்பட்டனர். குடியேற்ற செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர், இலங்கையின் கட்டளைத் தளபதி ஆகியோர் இந்த ஐந்து உறுப்பினர்கள ஆவார். இப்பேரவை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாகவும், அத்துடன் ஆளுனரின் ஆலோசகராகவும் செயல்பட்டது. 1921 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் படி மூன்று அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1947 ஆம் ஆண்டில் இலங்கை மேலாட்சிக்கான புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை தேசிய அமைச்சரவையாக மாற்றப்பட்டது.

அமைப்புதொகு

அரசுத்தலைவர் அமைச்சரவையின் உறுப்பினரும் தலைவரும் ஆவார்.[1] அரசுத்தலைவரே நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்.[1] பிரதமரின் ஆலோசனைப்படி, அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார்.[5] அரசுத்தலைவர் தனது விருப்பப்படியும் அமைச்சர்களை நியமிக்கலாம்.[5] அமைச்சரவை உறுப்பினரல்லாத அமைச்சர்களையும் (பிரதி அமைச்சர்கள், திட்ட அமைச்சர்கள்) அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கலாம்.[6][7] முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சரவை வாரத்தில் பல தடவைகள் கூடும்.

நடப்பு அமைச்சரவைதொகு

2015 சனவரி 8 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து 2015 சனவரி 9 அன்று புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

கட்சி அமைச்சர் அமைச்சு பதவியேற்பு
புஜமு மைத்திரிபால சிறிசேன அரசுத்தலைவர் 9 சனவரி 2015
பாதுகாப்பு அமைச்சர் 12 சனவரி 2015
ஐதேக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் 9 சனவரி 2015
கொள்கைத் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி 12 சனவரி 2015
ஐதேக ஜோன் அமரதுங்க சட்டம், ஒழுங்கு, கிறித்தவ விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் 12 சனவரி 2015
ஐதேக தலதா அத்துகோரல வெளிநாட்டு வேலைவாய்ப்பு 12 சனவரி 2015
அஇமகா ரிசாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் 12 சனவரி 2015
ஐதேக எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார உள்நாட்டு போக்குவரத்து 12 சனவரி 2015
தொதேச பழனி திகாம்பரம் தோட்ட உட்கட்டமைப்பு 12 சனவரி 2015
இசுக துமிந்த திசாநாயக்க வடிகாலமைப்பு 12 சனவரி 2015
ஐதேக நவீன் திசாநாயக்க சுற்றுலாத்துறை 12 சனவரி 2015
இசுக எம். கே. டி. எஸ். குணவர்தனா காணி 12 சனவரி 2015
இமுகா ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோகம் 12 சனவரி 2015
ஐதேக பி. அரிசன் சமூக சேவைகள் மற்றும் சமூகநலம் 12 சனவரி 2015
ஐதேக கபீர் ஹாசிம் பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு 12 சனவரி 2015
ஐதேக சந்திராணி பண்டார ஜயசிங்க மகளிர் விவகாரம் 12 சனவரி 2015
ஐதேக கரு ஜயசூரிய பொது நிர்வாக, பௌத்த சாசனம் 12 சனவரி 2015
ஐதேக அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சர் 12 சனவரி 2015
ஐதேக ரவி கருணாநாயக்க நிதி அமைச்சர் 12 சனவரி 2015
ஐதேக கயந்த கருணாதிலக்க ஊடக அமைச்சர் 12 சனவரி 2015
ஐதேக லக்ஷ்மன் கிரியெல்ல பெருந்தோட்டத்துறை 12 சனவரி 2015
ஐதேக காமினி ஜயவிக்கிரம பெரேரா உணவுப் பாதுகாப்பு 12 சனவரி 2015
ஐதேக எம். ஜோசப் மைக்கல் பெரேரா உள்விவகாரம் 12 சனவரி 2015
ஐதேக சஜித் பிரேமதாச வீடமைப்பு மற்றும் சமூர்த்தி 12 சனவரி 2015
ஜாஎஉ சம்பிக்க ரணவக்க மின்வலு எரிசக்தி 12 சனவரி 2015
ஐதேக விஜயதாச ராஜபக்ச நீதி அமைச்சர் 12 சனவரி 2015
புஜமு அர்ஜுன றணதுங்க துறைமுகம் மற்றும் கப்பல் சேவைகள் 12 சனவரி 2015
ஐதேக மங்கள சமரவீர வெளியுறவுத்துறை அமைச்சர் 12 சனவரி 2015
ஐதேக ராஜித சேனாரத்தின சுகாதார அமைச்சு 12 சனவரி 2015
ஐதேக டி. எம். சுவாமிநாதன் இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்றம் 12 சனவரி 2015

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அமைச்சரவை&oldid=2827568" இருந்து மீள்விக்கப்பட்டது