தற்காலிக மெனிங் அரசியலமைப்பு
தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே. இந்த அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபை(சட்டசபை)யின் கட்டமைப்பு வருமாறு:
சட்டநிரூபண சபை
தொகுசட்டநிரூபண சபையின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 37 இதில்
- உத்தியோக சார்பற்றோர் 23.
- உத்தியோக சார்புள்ளோர் 14,
உத்தியோக சார்பற்றோர்
தொகுஉத்தியோக சார்பற்ற அங்கத்தவர் எண்ணிக்கை, உத்தியோக சார்புள்ள அங்கத்தவர் எண்ணிக்கையை விட முதல் தடவையாக அதிகரிக்கப்பட்டது. உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 23 ஆகும். இதில் தெரிவின் மூலம் 16 பிரதிநிதிகளும் நியமனமாக 7 பிரதிநிதிகளும் இடம் பெற்றனர்.
தெரிவின் மூலம் - 16
தொகுதெரிவு செய்யப்பட்ட 16 பிரதிநிதிகளுள் 11 பிரதிநிதிகள் பிரதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரதேச ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டோர் - 11
- மேல் மாகாணம் - 3 பிரதிநிதிகள்
- மத்திய மாகாணம் - 1 பிரதிநிதி
- தென் மாகாணம் - 1 பிரதிநிதி
- வட மாகாணம் - 1 பிரதிநிதி
- வடமேல் மாகாணம் -1 பிரதிநிதி
- கிழக்கு மாகாணம் - 1 பிரதிநிதி
- வடமத்திய மாகாணம் - 1 பிரதிநிதி
- ஊவா மாகாணம் - 1 பிரதிநிதி
- சப்ரகமுவ மாகாணம் - 1 பிரதிநிதி
இன ரீதியான தெரிவுசெய்யப்பட்டோர் - 3
- நாட்டுப்புற ஐரோப்பியர் - 1
- நகர்ப்புற ஐரோப்பியர் - 1
- பறங்கியர் - 1
சங்கங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டோர் -2
- கீழ்நாட்டுப் பெருந்தோட்ட சங்கம் - 1
- வர்த்தக சங்கப்பிரதிநிதி - 1
தேசாதிபதியால் நியமிக்கப்படுவோர் - 7
தொகு- கண்டிச் சிங்களவர் - 2
- இந்தியர் - 1
- முஸ்லிம் - 1
- சிறப்பு - 3
உத்தியோக சார்புள்ளோர் 14
தொகுமுக்கிய அம்சங்கள்
தொகுதற்காலிக மெனிங் அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்
- இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதேச ரீதியான தெரிவு அறிமுகப்படுத்தப்பட்டமை
- இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகியகால அரசியலமைப்பு (சுமார் இரண்டரை வருடங்கள்)
- சட்டநிர்வாக சபையில் (நிர்வாகத்துறையில்) 3 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு இடம் வழங்கப்பட்டமை
- ஐரோப்பா - 1
- சிங்களவர் - 1
- தமிழர் - 1
உசாத்துணை
தொகு- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998