மேல் மாகாணம், இலங்கை
மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, சிங்களம்: බස්නාහිර පළාත) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன.[2][3] மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன.
மேல் மாகாணம்
Western Province බස්නාහිර පළාත | |
---|---|
இலங்கையில் அமைவிடம் | |
நாடு | இலங்கை |
அமைப்பு | 1 அக்டோபர் 1833 |
மாகாணசபை | 14 நவம்பர் 1987 |
தலைநகர் | கொழும்பு |
பெரிய நகரம் | கொழும்பு |
மாவட்டங்கள் | |
அரசு | |
• வகை | மாகாண சபை |
• நிர்வாகம் | மேல் மாகாணசபை |
• ஆளுநர் | ஹேமகுமார நாணயக்காரா |
• முதலமைச்சர் | பிரசன்னா ரணதுங்க |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,684 km2 (1,422 sq mi) |
• நிலம் | 3,593 km2 (1,387 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9வது (5.61%) |
மக்கள்தொகை (2012 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 58,21,710 |
• தரவரிசை | 1வது (28.73%) |
• அடர்த்தி | 1,600/km2 (4,100/sq mi) |
இனம் (2012 கணக்கெடுப்பு) | |
• சிங்களவர் | 4,905,425 (84.26%) |
• இலங்கைச் சோனகர் | 450,505 (7.74%) |
• இலங்கைத் தமிழர் | 335,751 (5.77%) |
• மலையகத் தமிழர் | 61,826 (1.06%) |
• ஏனையோர் | 68,203 (1.17%) |
சமயம் (2012 கணக்கெடுப்பு)[1] | |
• பௌத்தர் | 4,288,797 (73.67%) |
• கிறித்தவர் | 752,993 (12.93%) |
• முசுலிம் | 500,992 (8.61%) |
• இந்து | 274,336 (4.71%) |
• ஏனையோர் | 4,592 (0.08%) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை) |
அஞ்சல் குறியீடுகள் | 00000-19999 |
தொ.பே. குறியீடுகள் | 011, 031, 033, 034, 036, 038 |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-1 |
வாகனப் பதிவு | WP |
அதிகாரபூர்வ மொழிகள் | சிங்களம், தமிழ் |
இணையதளம் | மேல் மாகாண சபை |
இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
முக்கிய நகரங்கள்
தொகுநகரம் | மாவட்டம் | மக்கள்தொகை (2001 கணக்கெடுப்பு)[4] |
---|---|---|
கொழும்பு | கொழும்பு | 647,100 |
தெகிவளை-கல்கிசை | கொழும்பு | 210,546 |
மொறட்டுவை | கொழும்பு | 177,563 |
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை | கொழும்பு | 116,366 |
நீர்கொழும்பு | கம்பகா | 127,754 |
கம்பகா | கம்பகா | 9,889 |
களுத்துறை | களுத்துறை | 37,451 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ "Provinces of Sri Lanka". Statoids.
- ↑ "Provincial Councils". Government of Sri Lanka. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Population of principal towns by sex, census years" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |