அலி சப்ரி என அழைக்கப்படும் முகம்மது உவைசு முகம்மது அலி சப்ரி (Mohamed Uvais Mohamed Ali Sabry; பிறப்பு: மே 1, 1970) இலங்கை முசுலிம் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஆவார்.[2] அவர் இதற்கு முன்னர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5] இவர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமை சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர்.[6]

எம். யூ. எம். அலி சப்ரி
M. U. M. Ali Sabry
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
பதவியில்
22 சூலை 2022 – 23 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்தினேஷ் குணவர்தன
முன்னையவர்ஜி. எல். பீரிஸ்
நிதி அமைச்சர்
பதவியில்
5 ஏப்ரல் 2022 – 9 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராஜபக்ச
முன்னையவர்பசில் ராஜபக்ச
பின்னவர்ரணில் விக்கிரமசிங்க
நீதி அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 9 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்தலதா அத்துகோரல
பின்னவர்விஜயதாச ராஜபக்ச
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிதேசியப் பட்டியல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1970 (1970-05-01) (அகவை 54)
களுத்துறை, இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி
முன்னாள் கல்லூரிசாகிரா கல்லூரி, கொழும்பு,
களுத்துறை முசுலிம் மத்திய கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அலி சப்ரி களுத்துறையில் எம். எஸ். எம். உவைசு, சரீன் உவைசு ஆகியோருக்குப் பிறந்தவர். களுத்துறை முசுலிம் மத்திய கல்லூரியிலும், கொழும்பு சாகிரா கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.[7]

அரசியலில்

தொகு

2020 ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இறங்கினார். இலங்கை பொதுசன முன்னணியில் உறுப்பினரானார்.[8] 2020 சூலையில், கட்சியின் முசுலிம் பேரவையின் தேசியத் தலைவராக அரசுத்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10][11]

2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது பெயர் பொதுசன முன்னணியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேர்தலின் பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.[12][13] 2020 ஆகத்து 12 இல், இவர் கோட்டாபய ராஜபக்சவினால் 9-வது நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[14][15]

இவர் இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் சார்பில் 2020 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கோட்டாபய ராஜபக்சவின் அரசில் நீதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[15][16][17]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: Hon. M .U. M. Ali Sabry, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  2. "Ali Sabry is the new Foreign Minister of Sri Lanka". NewsIn Asia. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.
  3. Subramanian, Nirupama. "Meet the man who has the most unenviable job in Sri Lanka: Ali Sabry, Finance Minister". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.
  4. admin (2020-08-12). "Ali Sabry takes oaths as new Justice Minister | Colombo Gazette" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  5. Times, Colombo (2020-08-12). "Lawyer turned politician Ali Sabry is the new Justice Minister". Colombo Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  6. "New Cabinet: Ali Sabry appointed Minister of Justice". CeylonToday (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "President's Counsel Sabry signs nomination papers for appointed MP". colombotimes.net. http://colombotimes.net/presidents-counsel-sabry-signs-nomination-papers-for-appointed-mp/. பார்த்த நாள்: 16 August 2020. 
  8. Rasooldeen, Mohammed. "All citizens equal in SLPP Government – Ali Sabry". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  9. Corr, Addalaichenai-Central. "Muslims should rally round SLPP – Ali Sabry". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  10. "Ali Sabry, Uwais Hajiar lead SLPP Muslim Federation". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. "Ali Sabry, Uwais Hajiar to lead SLPP Muslim wing". www.themorning.lk. Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  12. "Muslims countrywide contributed to SLPP victory: Ali Sabry | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  13. Indrakumar, Menaka. "SLPP releases National list". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  14. LBO (2020-08-12). "Swearing-in ceremony for Sri Lanka's new Cabinet". Lanka Business Online (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  15. 15.0 15.1 "Minister of Justice Ali Sabry PC". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  16. LBO (2020-08-12). "Swearing-in ceremony for Sri Lanka's new Cabinet". Lanka Business Online (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  17. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections - 2020 - Declaration under Article 99A of the Constitution" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2188/2. Colombo, Sri Lanka. 10 August 2020. p. 2A. பார்க்கப்பட்ட நாள் 11 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_சப்ரி&oldid=4095757" இலிருந்து மீள்விக்கப்பட்டது