அரிணி அமரசூரியா

(ஹரிணி அமரசூரிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya, சிங்களம்: හරිනි අමරසූරිය, பிறப்பு: 6 மார்ச் 1970) இலங்கை கல்வியாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக விரிவுரையாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2024 செப்டம்பர் 24 முதல் இலங்கையின் 16-ஆவது பிரதமராகப் பதவியில் உள்ளார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான இவர், செப்டம்பர் 24 முதல் கூடுதலாக நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீடுகள் ஆகிய அமைச்சுப் பதவிகளையும் வகித்து வருகிறார். அமரசூரிய 2020 முதல் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகக் கற்கைகளுக்கான மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கருத்தியல் ரீதியாக மைய-இடதுசாரியாகவும், தாராளவாதியாகவும் விளங்குகிறார். இவர் இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு, இலங்கை கல்வி முறையின் திறமையின்மை ஆகியவை பற்றிய தனது ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோருக்குப் பின்னர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் இவராவார்.

ஹரிணி அமரசூரிய
Harini Amarasuriya
හරිනි අමරසූරිය
16-ஆவது இலங்கை பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
முன்னையவர்தினேஷ் குணவர்தன
நீதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்இவரே
முன்னையவர்விஜயதாச ராஜபக்ச
கல்வி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்இவரே
முன்னையவர்சுசில் பிரேமஜயந்த்
தொழில் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்இவரே
முன்னையவர்மனுசா நாணயக்கார
நாடாளுமன்ற உறுப்பினர்
தேசியப் பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 ஆகத்து 2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மார்ச்சு 1970 (1970-03-06) (அகவை 54)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி (2020 - இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
மக்கள் விடுதலை முன்னணி (2020 - இன்று)
முன்னாள் கல்லூரிபிசொப் கல்லூரி, கொழும்பு
வேலை
  • சமூக செயற்பாட்டாளர்
  • பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்
  • கல்வியாளர்
  • அரசியல்வாதி
இணையத்தளம்www.npp.lk/en/about

தேர்வை மையமாகக் கொண்ட கல்வி முறையை நாம் அகற்ற வேண்டும். கல்வி மிகவும் அனுபவபூர்வமாக இருக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்களின் கலாச்சாரம் மாற வேண்டும். பாலினம், மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரிந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்க வேண்டாம். மாறாக அங்கெல்லாம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். கல்விக்கு அரசு முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற முற்போக்குச் சிந்தனைகளுக்கு இவர் சொந்தக்காரராவார்.[2]

அரிணி அமரசூரிய கருத்தியல் ரீதியாக தேசிய மக்கள் சக்தியின் மைய-இடதுசாரிப் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளார், அத்துடன் தன்னை ஒரு தாராளவாதியாகக் கருதுகிறார். அமரசூரிய இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், பெண்ணியம், பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு, இலங்கைக் கல்வி முறையின் திறமையின்மை பற்றிய தனது ஆய்விக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் "நெசுட்" எனப்படும் இலங்கை அரச சார்பற்ற நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]

தொடக்க வாழ்க்கையும் தொழிலும்

தொகு

அமரசூரிய தில்லிப் பல்கலைக்கழகத்தின் தில்லி, இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்று சமூகவியலில் இளங்கலைப் பட்டமும்,[4] ஆத்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானிடவியலில் முதுகலைப் பட்டமும், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியலில் கலாநிதி பட்டமும் பெற்றார்.[5] இளைஞர்கள், அரசியல், கருத்து வேறுபாடு, செயல்பாடு, பாலினம், வளர்ச்சி, மாநில-சமூக உறவுகள், குழந்தைகள் பாதுகாப்பு, உலகமயமாக்கல், மேம்பாடு ஆகிய துறைகளில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.[6][7] பல ஆண்டுகள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் பயிற்சியாளராகப் பணியாற்றிய பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

ஹரிணி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பில் உறுப்பினராகி, இலவசக் கல்விக்காகப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.[8] பாலின சமத்துவம், LGBTQ+ உரிமைகள்,[9][10] ஆகியவற்றிற்காக வாதிட்டார். விலங்குகள் நலனுக்கான நாடாளுமன்றக் குழுவின் ஒரு உறுப்பினராக உள்ளார்.[11]

எடின்பரோ பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் மானுடவியல் துறையின் மானுடவியல், மனித உரிமைகள் மற்றும் நெறிமுறைகளின் மானுடவியல் திட்டத்தில் இவர் பணியாற்றினார்.

அரசியல்

தொகு

அரிணி 2019 ஆம் ஆண்டு தேசிய அறிவுசீவிகள் அமைப்பில் சேர்ந்தார். 2019 அரசுத்தலைவர் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவுக்காகப் பரப்புரைகளில் ஈடுபட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் 16 வது நாடாளுமன்றத்தில் நுழைய தேசிய பட்டியல் வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.[12][13][14]

பிரதமர்

தொகு

2024 செப்டம்பர் 24 அன்று, இலங்கையின் 16-ஆவது பிரதமராக அமரசூரிய புதிய அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டார்.[15] சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு பிரதமர் பதவியை வகித்த மூன்றாவது பெண்மணி இவர் ஆவார்.[16] பிரதமர் பதவியைத் தவிர, இவர் நீதி, சுகாதாரம், பெண்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Interview - Harini Amarasuriya". E-International Relations (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  2. "Cyber bullying prevents women from public positions - Harini Amarasuriya - Know Before You Vote". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Harini Amarasuriya". Youthpolicy.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  4. (24 September 2024). "Delhi roots, Colomobo heights: New Sri Lankan PM Harini Amarasuriya's fascinating link to India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved on 24 September 2024.
  5. Harini Amarasuriya - Manthri.lk. Retrieved on 24 September 2024.
  6. "Dr Harini Amarasuriya | IASH". www.iash.ed.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  7. "Who is Dr. Harini Amarasuriya ? NPP national list nominee". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  8. "Cyber bullying prevents women from public positions - Harini Amarasuriya". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. (25 June 2024). "NPP will back bill to decriminalise same-sex relationships - Harini Amarasuriya". Ada Derana. Retrieved on 24 September 2024.
  10. 30 July 2022. "Better Together | Episode 02 | Harini Amarasuriya". Daily Mirror Online. Retrieved on 24 September 2024.
  11. Parliamentary Caucus for Animal Welfare - The Parliament of Sri Lanka. Retrieved on 24 September 2024.
  12. "Rights activist and academic Dr Harini Amarasuriya is the NPP National List nominee". EconomyNext. 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Dr. Harini Amarasuriya named as JJB National List MP". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  14. tharindu. "හරිනි අමරසූරිය මාලිමාවේ ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුරයට". sinhala.srilankamirror.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-09-07. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  15. Jamkhandikar, Shilpa (24 Septemeber 2024). "Sri Lanka President Dissanayake picks Harini Amarasuriya as PM". ராய்ட்டர்ஸ். Retrieved 24 September 2024.
  16. "Former academic named Sri Lanka's third female prime minister". BBC. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
  17. "Sri Lanka's new president calls parliamentary election to consolidate his mandate". Associated Press. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிணி_அமரசூரியா&oldid=4149453" இலிருந்து மீள்விக்கப்பட்டது