பாலினச் சமனிலை

{{பெண்ணிய மெய்யிu

யல் பக்கப்பட்டை}}

பாலினச் சமனிலைக்கான மரபுக் குறியீடு

பாலினச் சமனிலை (Gender equality), அல்லது பாலியல் சமனிலை (sexual equality) அல்லது பாலிடை நிகர்மை (equality of the sexes) என்பது பாலினம் சாராமல் அனைவரும் வளங்களையும் வாய்ப்புகளையும் எளிமையாக அணுகவியலும் சமனிலையைக் குறிக்கிறது; இதில் பொருளியல் பங்கேற்பும் முடிவெடுக்கும் திறனும் அடங்கும். மேலும், இது வேறுபட்ட நடத்தைகளையும் ஆர்வங்களையும் தேவைகளையும் பாலினம் சாராமல் மதிப்பிடும் நிலையைக் குறிக்கும். சிக்கலைத் தவிர்க்க, இங்கு ஆண், பெண் தவிர, பிற பாலினங்கள் கருதப்படவில்லை.

மேலும் விரிவாக, பாலினச் சமனிலை (Gender equality) அல்லது பாலியற் சமனிலை என்பது ஆடவரும் பெண்டிரும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும், பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தலாகாது என்ற கருத்துநிலை ஆகும்.[1] இதுவே ஐக்கிய நாடுகள் அவையின் உலக மனித உரிமைகள் சாற்றுரையின் நோக்கமும் ஆகும்; சட்டத்தின்படியும் மக்களாட்சி செயற்பாடுகள் போன்ற சமூகச் சூழலிலும் ஆண், பெண் சமமையை உருவாக்குவதும் சமனான பணிகளுக்கு சமனான ஊதியம் வழங்கலும் இந்தச் சாற்றுரையின் இலக்குகளாகும்.


{==மேற்கோள்கள்==

  1. ஐக்கிய நாடுகள். பொருளியல் நிலை, சமூக நிலை ஆகியவற்றுக்கான அவையின் 1997 ஆண்டுக்கான அறிக்கை . A/52/3.18 செப்டம்பர் 1997, 28: "Mainstreaming a gender perspective is the process of assessing the implications for women and men of any planned action, including legislation, policies or programmes, in all areas and at all levels. It is a strategy for making women's as well as men's concerns and experiences an integral dimension of the design, implementation, monitoring and evaluation of policies and programmes in all political, economic and societal spheres so that women and men benefit equally and inequality is not perpetuated. The ultimate goal is to achieve gender equality."

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலினச்_சமனிலை&oldid=3387641" இலிருந்து மீள்விக்கப்பட்டது