தாராளமயம் (liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான கொள்கையாகும். இக் கொள்கை பரந்த எண்ணக்கருக்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், பொருளியல் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது கடமையாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் அறிவொளிக் காலத்தில் இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, தலைமுறை உரிமை, அரசு மதம், காப்பாண்மையியம் (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை எடுகோள்கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது.

எடம் ஸ்மித் என்பவராலும் பிறராலும் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராளமயம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராளமயத்தின் அடிப்படைகள்.

பண்பாட்டுத் தாராளமயம் என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.

வெவ்வேறு வடிவங்களிலான தாராளமயங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்கும்.

சொற்பிறப்பு

தொகு

தாராளமாக, தாராளவாதி, தாராளமயம் போன்ற வார்த்தைகள் அனைத்தும், லத்தீன் மொழியின் 'லிபர்' என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதற்கு அர்த்தம் 'இலவசம்' என்பதாகும். இந்த வார்த்தை முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது 1375ல், 'தாராளக் கலை' என்னும் வடிவத்தில். அனைத்து மனிதர்களுக்கும் இலவசக் கல்வி என்னும் கருத்தைக் கொண்டது.

பொருள்

தொகு

அன்றாட வாழ்வில் 'தாராளமயம்' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி [1] போன்ற பொருள்களைக் குறிக்கும்.

வரலாற்றில், ஒவ்வொரு கால கட்டங்களிலும் தாராளமயத்திற்கு ஒவ்வொரு பொருள் உண்டு. 1387ல் தாராளம் என்றால் ' இலவசமாய் வழங்குதல்' எனப் பொருள், 1433ல் 'வரையறையில்லாமல் செய்தல்' எனப் பொருள், 1530ல் 'இலவச அனுமதி' என்றுப் பொருள். 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டில் 'கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை' என்ற பொருளைக் கொண்டிருந்தது. 16ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களிடையே தாராளம் என்பதற்கு எதிர்மறை அர்த்தத்திலும் நேர்மறை அர்த்தத்திலும் உபயோகப் படுத்தப்பட்டது. இதற்கான எடுத்துக்காட்டுகள், பிரபல எழுத்தாளர் சேக்ஸ்சிபியர் நாவல்களில் உள்ளன. அறிவொளிக் காலத்தில் இதனை விழிப்புணர்வுடன் நேர்மறை அர்த்தத்தில் மட்டுமே பயன்படுதத்ப்பட்டது. பின்னர், காலப் போக்கில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டது

தாராளமயம் பல பகுதிகளில் பல கோட்பாடுகளை கொண்ட போதிலும், தனிமனித உரிமைகள் மற்றும் சமமான வாய்ப்புகளைப் பற்றி வலியுறுத்துகிறது. தாராண்மையியம், பல வகைகளாக இருந்தாலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை கொள்கைகள் பொதுவானதே. தாராளமயம் தனிமனித உரிமைகளையே வலியுறுத்தம், எல்லா வித பொதுக்கூட்டுடைமைக்கும் எதிரானதே.

தாராளமயம் , மேற்கத்திய கலாச்சாரத்தால் உருவான ஒரு உணர்வு. மேற்கத்திய மக்கள் எப்போதும் தனித்துவம் பெற்றவர்களாக திகழ்வார்கள். வரலாற்றை புரட்டிப் பார்த்தால், உலகின் மற்ற பகுதிகளில் தனிமனிதன் தனித்து திகழமாட்டான், ஒரு சாதியின் கீழையோ அல்லது ஒரு குலத்தின் கீழையோ அல்லது ஒரு இனத்தின் கீழையோ திகழ்ந்தான். இத்தகைய கூட்டமைப்புகள் மேற்கத்திய நாடுகளில் இல்லாதலால், இந்த தாராளமயம் தோன்றியது.[2]

வரலாறு

தொகு

தாராளமயம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராளமயம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார்

சான் லாக்கே, 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார். இந்த கட்டுரைகள் நிலைநாட்டிய இரண்டு முக்கிய கருத்துகள், பொருளாதார தாராளமயம் (அதாவது செல்வம் சேர்ப்பதுக்கான உரிமை) மற்றும் அறிவொளிச் சுதந்திரம். அவரது கோட்பாடான இயற்கை உரிமைகள், நவீன தாராளமயத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது. அமெரிக்க புரட்சியிலும், பிரெஞ்சு புரட்சியிலும் இந்த இயற்கை உரிமையின் தாக்கமே அதன் தாராளமயத்தை வளரச் செய்தது. லாக்கே ஜனநாயகத்துக்கு எதிரானவர், தனிமனிதனின் செல்வம் சேர்க்கும் உரிமையே முக்கியம் எனக் கருதியவர்.

பிராஞ்சு நாட்டை சேர்ந்த பாரன் தி மாண்டிஸ்கே (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார். இந்த சட்டத் திட்டங்கள், அரசு குடுமபத்தினற்கு எதிராக அமைந்தது. பல பிராஞ்சு அறிஞர்கள் சேர்ந்து 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்என்னும் பொருளாதார அமைப்பை வடிவமைத்தனர்.

 
ஆடம் சிமித்

அறிவொளி காலகட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே (1712 - 1778) [3], சில முக்கிய தாராளமயம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும்.

ஸ்காட்டீஸ் அறிவொளி காலகட்ட சிந்தனையாளர்கள், டேவிட் ஹ்யூம்(1711 - 1776), ஆடம் ஸ்மித் (1723 - 1790) தாராளமயத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர். ஹ்யூமைப் பொருத்த வரையில், மனிதனின் அடிப்படை குணங்கள் கட்டுப்பாடுகளை இறுதியில் உடைத்து எரியும். தனிமனிதனால் தனது அறநெறிகளையும், பொருளாதாரத்தையும் தானே வடிவமைத்துக் கொள்ள முடியும் என ஆடம் ஸ்மித் விவரித்தார். தனி மனிதன் தனது முயற்சிகளை சுதந்திரமாக, அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி மேற்கொண்டால் தான், நாட்டின் பொருளாதரம் வளரும். இயற்கையாகவோ அல்லது தேவையின் பொருட்டோ, தனிமனிதன் தன் வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுக்கும் போது தான், சமுதாயத்திற்கு நன்மை கிட்டும். 1776ம் ஆண்டில் படைத்த நாட்டின் வளமை என்னும் இவரது படைப்பு வலியுறுத்துவது, கட்டுப்பாடின்றி திகழும் சந்தைக்கு தாமாகவே தன்னைச் சீர் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.

அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், தாமஸ் பேயின் (1737 - 1809), தாமஸ் ஜெப்பர்சன் (1743 -1826) மற்றும் சான் ஆடம்ஸ் (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராளமயத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது.[1]

தாராளமயம் கொள்கைகளின் வரலாற்றில் மற்றொரு முக்கிய தாக்க, பிரஞ்சு புரட்சி (1789 - 1799). இதில் அமெரிக்க புரட்சியைக் காட்டிலும் கிளர்ச்சி மேலோங்கித் தென்ப்பட்டது.

19ம் நூற்றாண்டில், தனது படைப்பு தாராளமயம் (1859) மற்றும் பல படைப்புகள் மூலம், சான் சுடூவர்ட் மில்(1806-1873) பிரபலமாக்கினார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு பிரிவுகள் தென்பபட்டன. ஓரு பிரிவு அரசாங்கத்தை முற்றிலும் எதிர்த்து, மற்றொரு பிரிவின் கருத்து, பொருளாதாரம் பொருத்த வரையில் அரசாங்கத்தில் தலையீடு சிறிதளவில் தேவைப்பட்டது.

20ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக சமூக(நவீன) தாராளமயம் உருவானது. இதனை ஆதரித்த பிரபலங்கள், சான் மேய்நார்ட்' (1883 - 1946), பிராங்கலின் ரூஸவெல்ட் (1882 - 1945) மற்றும் சான் கென்னத் கால்பிரேத் (1908 - 2006)

வகைகள்

தொகு

சித்தாந்தங்களைப் பொருட்டு தாராளமயம், இரண்டு வகைப்படும். பாரம்பரிய தாராளமயம் மற்றும் சமூக தாராளமயம்

பாரம்பரிய தாராளமயம்

தொகு

பாரம்பரிய தாராளமயத்தின் மிக முக்கிய சித்தாந்தம், கட்டாயப்படுத்துதலிருந்து விடுதலை. பொருளாதாரத்தில் அரசு தலையீடும் ஆற்றல் என்பது ஒரு வகையான கட்டாயப்படுத்துதலே. இது தனி மனித பொருளாதரத்தை வரையறைப் படுத்துகிறது. 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்' என்னும் பொருளாதார வழிப்பாட்டை ஆதரிக்கிறது. இது பிரஞ்ச் தொடர்மொழியாகும், தமிழில் இதன் பொருள், 'அவர்களையே செய்ய விடுங்கள்'. அதாவது பாரம்பரிய தாராளமயம் பொருத்த வரையில் தனியார் பரிவர்த்தனைகள் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசின் சுங்க வரிகள், ஒழுங்கு முறைகள், மாணியங்கள், சலுகைகள் ஆகியவை நீக்கப்பட வேண்டும். மேலும், இது அரசின் பொதுநல சேவைகளுக்கு எதிரானது.

சமூக தாராளமயம்

தொகு

சமூக தாராளமயம், இதற்கு முற்றிலும் மாறுப்பட்டு, பொதுநல சேவைகளில் அரசின் பங்கு மிகவும் முக்கியம் என வழிமொழிகிறது. எப்போது குடிமக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும், படித்தவர்களாகவும் கொடிய ஏழ்மையிலிருந்து விடுப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்களோ, அன்றே முழுமையான தன்னுரிமை பெறுவார்கள். சமூக தாராளமையாளர்களின் நம்புவது என்னவென்றால், பொதுச் சேவைகளான கல்வியுரிமை, உடல்நலம் காப்பீடு, வாழ்க்கை ஊதியம், வேலைப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த, ஏறு வரி, சுங்க வரி ஆகியவற்றை ஒர் அரசு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.

வேறுபாடுகள்

தொகு

மற்ற உலக சித்தாந்தங்களைப் போல தாராளமயத்தில் பல வேறுபாடுகள் உள்ளன [1]

  • பழமைவாத தாராளமயம் - இது வலதுசாரி சிந்தனையாளர்களின் சித்தாந்தமாகும். இவர்கள் தாராண்மையியத்துடன் பழமைவாத நிலைப்படுகளையும் ஆதரிப்பனர். அரசாங்கமும் மதம் சார்ந்த அமைப்புளும் தனித்துச் செயல்ப்பட வேண்டும். இவர்கள் பொருளாதரத்திற்கு எதிராக தீவரமாக எதிர்க்கமாட்டார்கள்
  • பொருளாதார தாராளமயம் - பெயர் குறிப்பிடுவதுப் போல, இந்த சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், தனிமனித பொருளாதார சுதந்திரத்திற்கு எதிராக அரசின் கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள். அறிவொளி காலகட்டத்தில், 'ஆடம் ஸ்மித்' என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
  • நவ தாராளமயம் குறிப்பிடுவது என்னவென்றால் வர்த்தக தடைகளை நீக்கி, அரசாங்கம் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வழி வகுத்துத் தர வேண்டும். இது நவீன பாரம்பரிய தாராளமயம் போல தோன்றும். இதனை அமெரிக்க குடியரசுத் தலைவர் 'ரொனால்ட் ரீகன்' மற்றும் இங்கிலாந்து முதலமைச்சர் 'மார்கரட் தாட்ச்சர்' ஆகியோரால் பின்ப்பற்றப்பட்டது.
  • அமெரிக்க தாராளமயம் என்பது சமூக தாராளமயம், சமூக முன்னெற்றம் மற்றும் கலப்பு பொருளாதாரத் தத்துவங்களின் கலவையே. இதுக்கும் பாரம்பரிய தாராளமயத்துக்கும் உள்ள வேறுபாடுகள், அமெரிக்க தாராளமயம் அரசாங்கத்தின் பொதுநல சேவைகள் மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொள்கிறது.
  • தேசிய தாராளமயம் - இது ஒரு வகையான தாராளமயத்தின் மாறுபாடு. பொருளாதார தாராளமயத்துடன் தேசியாவத கொள்கைகளும் இருக்கும். 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில், பல ஐரோப்பிய நாடுகளில் இந்த கொள்கைகள் பிரபலமாக இருந்தது
  • பாலியோ தாராளமயம் பொருள் பெரும்பாலும் தெளிவற்று விளங்கினாலும், மிக தீவர தாராளமயமாகும். நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிரானது
  • கலாச்சார தாராளமயம் - கலாச்சார கட்டுப்பாடுகளைக் காட்டிலும் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்னும் கொள்கையைக் கொண்டது

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராளமயம்&oldid=3909970" இலிருந்து மீள்விக்கப்பட்டது